Published : 12 May 2021 01:38 PM
Last Updated : 12 May 2021 01:38 PM

காசாவிலிருந்து 1000 ஏவுகணைகள் மூலம் ஹமாஸ் தாக்குதல்: இஸ்ரேல் ராணுவம் தகவல்

காசா பகுதியிலிருந்து சுமார் 1000 ஏவுகணைகள் மூலம் ஹமாஸ் இயக்கத்தினர் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இஸ்ரேல் ராணுவம் தரப்பில் கூறும்போது, “திங்கட்கிழமை முதலே ஹமாஸ் இயக்கத்தினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் எல்லையில் பதற்றம் நிலவியது. இதுவரை இஸ்ரேலில் 850 ஏவுகணைகளையும், காசா பகுதியில் 200 ஏவுகணைகளையும் ஹமாஸ் தீவிரவாதிகள் ஏவித் தாக்குதல் நடத்தினர். இதில் பல ஏவுகணைகள் இஸ்ரேல் ராணுவத்தால் தாக்கி அழிக்கப்பட்டன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2014ஆம் ஆண்டுக்குப் பிறகு இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் நடந்த மிகப் பெரிய தாக்குதல் இதுவாகும்.

முன்னதாக, பாலஸ்தீனர்கள் ஜெருசலேமில் அமைந்துள்ள அல் அக்ஸா மசூதியில் ரம்ஜானை முன்னிட்டு சனிக்கிழமை அன்று இரவில் தொழுகையில் ஈடுபட்டனர். சுமார் 90,000 பாலஸ்தீனர்கள் அப்பகுதியில் கூடி இருந்தனர். அப்போது அங்கு வந்த இஸ்ரேல் போலீஸார் தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். இதில் பாலஸ்தீனர்கள் பலர் காயமடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து பாலஸ்தீனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் இஸ்ரேல் மீது ஹமாஸ் வான்வழித் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடி அளிக்கும் வகையில் இஸ்ரேல் ராணுவம் காசா பகுதியில் தாக்குதல் நடத்தியது.

இதனைத் தொடர்ந்து இஸ்ரேல் ராணுவத்துக்கும், ஹமாஸ்க்கும் இடையே மோதல் வலுத்து வருகிறது. இரு தரப்புக்கும் இடையே நடந்த தாக்குதலில், பாலஸ்தீனத்தில் 35 பேரும், இஸ்ரேலில் 5 பேரும் பலியாகினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x