சவுதியுடன் பேச்சுவார்த்தை: ஒப்புக்கொண்ட ஈரான்

சவுதியுடன் பேச்சுவார்த்தை: ஒப்புக்கொண்ட ஈரான்
Updated on
1 min read

சவுதியுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை முதல் முறையாக ஈரான் அரசு ஒப்புக்கொண்டது.

இதுகுறித்து ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் சயீத் (திங்கட்கிழமை) பத்திரிகையாளர் சந்திப்பில் பேசும்போது, “ஈரான் எப்போதும் பிராந்தியம் தொடர்பான பேச்சுவாரத்தைகளை வரவேற்கும். அந்த வகையில் இதனையும் வரவேற்கிறோம். ஈரான் கொள்கையில் எந்த பாதிப்பும் இல்லை. ஆனால் சவுதியுடனான எங்களது பேச்சுவார்த்தைக்கான முடிவுகளுக்குக் காத்திருக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

சில நாட்களுக்கு முன்னர் ஈரான் - சவுதி தலைவர்கள் பாக்தாத்தில் இரு நாட்டு உறவு குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தகவல்கள் வெளியாகின. மேலும், சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் ஈரானுடன் சிறப்பான உறவைக் கொண்டிருப்பதாக சமீபத்திய நேர்காணலில் தெரிவித்தார்.

ஈரான் - சவுதி மோதல்

சவுதி அரேபியாவில் உள்ள மிகப்பெரிய எண்ணெய் வளப்பகுதியான ஹிஜ்ரா குரையாஸில் அராம்கோ நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள அப்கய்க் மற்றும் குராயிஸ் பகுதிகளில் உள்ள இரு எண்ணெய் ஆலைகள் மீது ஆளில்லா விமானங்கள் மூலம் ஏமன் கிளர்ச்சிப் படையினர் தாக்குதல் நடத்தினர்.

இந்தத் தாக்குதலுக்கு ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்றனர். எனினும் இதன் பின்னணியில் ஈரான் உள்ளதாக சவுதி, அமெரிக்கா ஆகிய நாடுகள் குற்றம் சுமத்தியுள்ளன. இதனால் ஈரான் - சவுதி இடையே பதற்றம் நீடிக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in