Last Updated : 09 May, 2021 11:31 AM

 

Published : 09 May 2021 11:31 AM
Last Updated : 09 May 2021 11:31 AM

பூமியில் விழும் சீன ராக்கெட்டின் 18 டன் எடையுள்ள பாகம்: மாலத்தீவு அருகே இந்தியப் பெருங்கடலில் விழுவதால் அச்சம்

விண்ணுக்கு ஏவப்பட்ட சீனாவின் லாங் மார்ச் ராக்கெட் | படம் உதவி ட்விட்டர்

பெய்ஜிங்

சீனா அனுப்பிய மிகப்பெரிய லாங் மார்ச் ராக்கெட்டின் 18 டன் எடை கொண்ட உடைந்த பாகம், பூமியின் நீள்வட்டப் பாதைக்குள் நுழைந்துவிட்டது. இந்த ராக்கெட்டின் ராட்சத பாகம், இந்தியப் பெருங்கடலில், மாலத்தீவுக்கு அருகே விழக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

ஆனால் மாலத்தீவு அருகே எங்கே விழப்போகிறது, எப்போது விழப்போகிறது எனத் தெரியாமல் சீனா, அமெரி்க்கா, மாலத்தீவு நாடுகளின் அரசுகள் பெரும் கவலையிலும், அச்சத்திலும் உள்ளன.

சீன நேரப்படி இன்று காலை 10.24 மணிக்கு பூமியின் சுற்றுப்பாதைக்குள் லாங் மார்ச் ராக்கெட்டின் மிகப்பெரிய பகுதி நுழைந்தது. இந்த ராக்கெட்டின் உடைந்த பகுதி 72.47 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும், 2.65 டிகிரிவடக்கு அட்சரேகையிலும் இந்தியப் பெருங்கடல் பகுதியில், மாலத்தீவுக்கு அருகே கடலில் விழும் என எதிர்பார்க்கப்படுகிறது என சீனாவின் வி்ண்வெளி்த்துறை பொறியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

சீனா விண்வெளியில் உருவாக்கி வரும் தியாங்காங் விண்வெளி நிலையத்துக்கு பல்வேறு பொருட்களை சுமந்து கொண்டு கடந்த மாதம் 29-ம்தேதி ஹெய்னன் நகில் உள்ள வென்சாங் விண்வெளி நிலையத்திலிருந்து லாங் மார்ச் 5-பி எனும் ராக்கெட் ஏவப்பட்டது.

அந்த ராக்கெட் ஒரு பாகம் அதாவது 33 மீட்டர் (108 அடி) 20 டன் எடை கொண்ட பாகம் திடீரென ராக்கெட்டிலிருந்து பிரிந்து பூமியை நோக்கி விழத் தொடங்கியது.

வினாடிக்கு 8.கிமீ வேகத்தில் பூமியை நோக்கி கீழே வேகமாக வரும் அந்த ராக்கெட்டின் பெரும்பாலான பாகங்கள் காற்றில் எரிந்து விடும். இருந்தாலும், எரியாத நிலையில் எத்தனை பாகங்கள் இந்தியப் பெருங்கடலில் விழப்போகிறது எனத் தெரியவில்லை.

இது குறித்து சீன வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் வாங் வென்பின் கூறுகையில் “ ராக்கெட்டின் மேல்பகுதி திடீரென விண்வெளியிலிருந்து கீழே விழுவதும், அது பூமியை நோக்கி கீழே விழுவதும் வழக்கமான ஒன்று. ஆனால், பெரும்பாலான நேரங்களில் பூமிக்குள் நுழையும்போது ராக்கெட்டின் பாகங்கள் எரிந்து காற்றோடு கலந்து விடும். இந்த ராக்கெட்டின் பாகம் பூமிக்குள் நுழைந்தது முதல் சீனா உன்னிப்பாகக் கவனித்து வருகிறது.

எங்களைப் பொறுத்தவரை ராக்கெட்டின் மேல்பகுதி செயல்பாட்டை இழந்துவிட்டதால், பூமிக்குள் நுழையும் போது பெரும்பகுதி எரிந்துவிடும்”எனத் தெரிவி்த்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x