

மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள் தயாரிப்புத் துறையில் அமெரிக்கநிறுவனங்களின் முதலீட்டை ஈர்க்க மத்திய அரசு முயன்று வருகிறது. இது தொடர்பாக முன்னணி அமெரிக்க மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களுடன் அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரஞ்சித் சிங் சந்து பேச்சுவார்த்தை மேற்கொண்டுள்ளார்.
ஃபைஸர் நிறுவனத்தின் சிஇஓ ஆல்பர்டோ போர்லோ, தெர்மோ ஃபிஷர் நிறுவனத்தின் சிஇஓ மார்க் காஸ்பர், அன்டிலியா சயின்டிஃபிக் நிறுவனத்தின் சிஇஓ பெர்ண்ட் பிரஸ்ட், பால் லைஃப் சயின்ஸ் நிறுவனத்தின் சிஇஓ ஜோசப் ரெப், சிடிவா நிறுவனத்தின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான இம்மானுவேல் லிக்னர் ஆகியோரைத் தொடர்பு கொண்டு தரஞ்சித் சிங் சந்து பேசியுள்ளார்.
அமெரிக்க மருந்துத் தயாரிப்புநிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்வதை ஊக்குவிக்கும் முயற்சியில் இந்தியா இறங்கியிருப்பதாக அவர்களிடம் தரஞ்சித் சிங் சந்து தெரிவித்துள்ளார். அமெரிக்க நிறுவனங்களுக்கு புதிய முதலீட்டு வாய்ப்புகளை வழங்கும் நோக்கில் இந்திய அரசு அறிமுகப்படுத்தியிருக்கும் ஊக்கத் திட்டத்தைப் பற்றியும் அவர் விளக்கியுள்ளார்.
கரோனா இரண்டாவது அலைஇந்தியாவில் மிகப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. மருத்துவமனைகளில் தேவையான அளவில் படுக்கைகள் மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் இல்லாத காரணத்தினால் கரோனாதொற்றுக்கு உள்ளானவர்கள் உயிரிழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.