

2015ஆம் ஆண்டில் சர்வதேச அளவில் 110 பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்பட்டிருப்பதாக சர்வதேச அளவிலான கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
இதில் 9 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்று குறிப்பிட்டுள்ள கண்காணிப்பு மையம், ஆசியாவிலேயே பாகிஸ்தான் ஆப்கானிஸ்தானுக்கு அடுத்தபடியாக இந்தியா தான் ஊடகவியலாளர்களுக்கு ஆபத்தான நாடு என்று குறிப்பிட்டுள்ளது.
இது குறித்த ஆய்வில், எல்லைகளுக்கு அப்பாற்பட்ட நிருபர்கள் அமைப்பு கூறும்போது, "இந்த ஆண்டில் மட்டும் இந்தியாவில் 9 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் சிலர் அரசியல்வாதிகளின் தொடர்புடைய திட்டமிடப்பட்ட குற்றங்கள், மற்றும் சட்டவிரோதமாக சுரங்க நடவடிக்கை போன்ற செய்திகளை அம்பலப்படுத்தியதற்காக கொல்லப்பட்டுள்ளனர்.
5 பேர் இப்படிப்பட்ட பணி நிமித்தமாக கொல்லப்பட, மற்றவர்கள் கொல்லப்பட்டதன் காரணம் வெளிவரவில்லை. இவர்களின் மரணத்தின் மூலம் பாகிஸ்தான், ஆப்கான் நாடுகளுக்கு அடுத்ததாக இந்தியாதான் ஆசியாவிலேயே ஊடகவியலாளர்களுக்கு ஆபத்தான நாடாக திகழ்கிறது.
இதற்கு எதிராக இந்தியாவில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பத்திரிகையாளர்களை பாதுகாக்க எத்தகைய திட்டங்களும் தீட்டப்படவில்லை. ஆனால் இந்தியாவில் இதற்கான அவசியம் அதிகமாக உள்ளது." என்று குறிப்பிட்டுள்ளது.
2015ல் மொத்தம் 110 பத்திரிகையாளர்கள் கொலை
2015ஆம் ஆண்டில் சர்வதேச அளவில் 110 பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்பட்டிருப்பதாக சர்வதேச அளவிலான கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. இராக் மற்றும் சிரியாவில் அதிகளவில் பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.