ஆஸ்ட்ராஜெனிகா தடுப்பூசி பாதுகாப்பானது: மலேசியா

ஆஸ்ட்ராஜெனிகா தடுப்பூசி பாதுகாப்பானது: மலேசியா
Updated on
1 min read

ஆஸ்ட்ராஜெனிகா தடுப்பூசி பாதுகாப்பானதாக இருப்பதாக மலேசிய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, மலேசிய சுகாதாரத்துறை தரப்பில், ”ஆஸ்ட்ராஜெனிகா தடுப்பூசி பாதுகாப்பாகத்தான் உள்ளது. நாங்கள் 60 வயதுக்கும் அதிகமான உள்ள நபர்களுக்கு இந்தத் தடுப்பூசியைச் செலுத்த இருக்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்ட்ராஜெனிகா தடுப்பூசியால் ரத்தம் உறைவுப் பிரச்சினை ஏற்படுவதாகக் கூறி, அந்தத் தடுப்பூசிக்கு ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் நாடுகள் தடை விதித்துள்ளன. அவற்றைத் தொடர்ந்து ஸ்பெயின், போர்ச்சுகல், லாட்வியா, ஸ்லோவேனியா போன்ற நாடுகளும் ஆஸ்ட்ராஜெனிகா தடுப்பு மருந்துகளுக்குத் தடை விதித்துள்ளன.

உலக அளவில் கரோனாவை எதிர்கொள்ள ஆஸ்ட்ராஜெனிகா, பைசர், மாடர்னா, இந்தியத் தயாரிப்பான கோவாக்ஸின், கோவிஷீல்டு, ரஷ்யத் தயாரிப்பான ஸ்புட்னிக்- 5 உள்ளிட்ட பல்வேறு தடுப்பூசிகள் புழக்கத்தில் உள்ளன.

இந்நிலையில், திடீரென சில உலக நாடுகள் ஆஸ்ட்ராஜெனிகா தடுப்பூசிக்கு எதிர்ப்பு தெரிவிப்பதால் தடுப்பூசி திட்டத்தில் பின்னடைவு ஏற்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in