Last Updated : 29 Dec, 2015 09:49 AM

 

Published : 29 Dec 2015 09:49 AM
Last Updated : 29 Dec 2015 09:49 AM

பாலியல் வன்கொடுமை விவகாரம்: ஜப்பான்- தென்கொரியா உடன்பாடு

இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பானிய ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட சுமார் 2 லட்சம் பெண்கள் பாலியல் அடிமைகளாக மாற்றப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் தென் கொரிய பெண்கள்.

இந்த விவகாரத்தால் ஜப்பா னுக்கும் தென்கொரியாவுக்கும் இடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டு வந்தன. இந்நிலையில் ஜப்பான் வெளியுறவு அமைச்சர் புமியோ கிஷிதா நேற்று தென்கொரிய தலைநகர் சியோ லில் அந்த நாட்டு அதிபர் பார்க் ஜென்-ஹை, வெளியுறவு அமைச்சர் யுன் யங்-சி ஆகியோரை சந்தித்துப் பேசினார்.

அதன்பின் நிருபர்களிடம் புமியோ கிஷிதா கூறியதாவது:

இரண்டாம் உலகப்போரில் நடந்த சம்பவத்துக்காக ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண்களின் நலனுக்காக ஜப்பான் அரசு ரூ.55 கோடியை சிறப்பு நிதியுதவியாக அறிவித்துள்ளது என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x