இந்திய விமானங்களுக்கு ஐக்கிய அரபு அமீரகம் தடை

இந்திய விமானங்களுக்கு ஐக்கிய அரபு அமீரகம் தடை
Updated on
1 min read

இந்தியாவிலிருந்து வரும் விமானங்களுக்கு பத்து நாட்களுக்கு ஐக்கிய அரபு அமீரகம் தடை விதித்துள்ளது.

இந்தியாவில் இரண்டு வாரங்களாக கரோனா பரவல் தீவிரமடைந்துள்ளது. நேற்று மட்டும் 3 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தங்களது நாட்டு மக்களை இந்தியாவுக்குப் பயணிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளன.

இந்தியாவிலிருந்து வரும் பயணிகள் 10 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது. மேலும் இந்தியாவிலிருந்து வரும் பயணிகள் விமானத்தை 30% ஆஸ்திரேலிய அரசு குறைத்துள்ளது.

இந்த நிலையில் இந்தியாவிலிருந்து விமானங்களை 10 நாட்களுக்கு தடை விதித்து ஐக்கிய அரபு அமீரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வரும் ஞாயிறு முதல் இந்த தடை அமல்படுத்தப்படும் என்றும் அமீரகம் அரசு அறிவித்துள்ளது.

பல்வேறு நாடுகளில் கரோனா பாதிப்பு இரண்டாம், மூன்றாம் அலையை எட்டியுள்ளது. இதனைத் தடுக்க கரோனா தடுப்பூசி செலுத்துவதை அரசுகள் தீவிரப்படுத்தியுள்ளன.

உலகம் முழுவதும் 14 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 11 கோடி பேர் குணமடைந்த நிலையில் 30 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in