Published : 22 Apr 2021 05:57 PM
Last Updated : 22 Apr 2021 05:57 PM

தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களுக்கு ஐக்கிய அமீரகம் எச்சரிக்கை

கரோனா தடுப்பூசியை யாரெல்லாம் போட்டுக் கொள்ளவில்லையோ அவர்கள் மீது தீவிரக் கட்டுப்பாடுகளும், தடைகளும் அமல்படுத்தப்படும் என்று ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் 16 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கரோனா தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ள வேண்டும் என்று அரசு தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் தடுப்பூசி மீதான சந்தேகத்தில் சிலர் கரோனா தடுப்பூசி போடாமல் உள்ளனர். இதனால் புதிய அறிவிப்பை ஐக்கிய அரபு அமீரகம் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய அவசர நெருக்கடி மற்றும் பேரழிவு மேலாண்மை ஆணையம் தரப்பில், “கரோனா தடுப்பூசிகளைப் போட்டுக் கொள்ளாதவர்கள் மீது கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். வெளி இடங்களுக்கு அனுமதி மறுக்கப்படும். அவர்களுக்கு வழங்கப்படும் சேவைகள் நிறுத்தப்படும். உங்களது தயக்கம் எங்களது இலக்குகளை அடையத் தடையாக உள்ளது. நீங்கள் உங்கள் குடும்பத்தையும், சமூகத்தையும் ஆபத்தில் சிக்க வைக்கிறீர்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,903 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை 5 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x