

ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிர வாத அமைப்பில் இருபிரிவின ருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் தலிபான் தலைவர் முல்லா அக்தர் மன்சூர் சுட்டுக் கொல்லப்பட்டதாக ஆப்கன் அரசு தகவல் வெளியிட் டுள்ளது.
ஆனால், அவர் உயிருடன் இருப் பதாக தீவிரவாதிகள் தெரிவித் துள்ளனர். இதனால் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
தலிபான் அமைப்புக்குள் பிரி வினை நிலவுகிறது. வியாழக் கிழமை பாகிஸ்தானின் குவெட்டா நகர் அருகே தலிபான் அமைப்பினர் கூடியிருந்தபோது, இருதரப்பின ருக்கிடையே ஏற்பட்ட மோதலில் துப்பாக்கிச் சண்டை நிகழ்ந்தது. இதில் மிக மோசமாக காயமடைந்த முல்லா அக்தர் மன்சூர் உயிரிழந்த தாக உளவுத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பாக, ஆப்கானிஸ் தான் முதன்மை துணை அதிபரின் செய்தித் தொடர்பாளர் சுல்தான் ஃபைஸி ட்விட்டர் தளத்தில், “தலி பான் தலைவர் முல்லா அக்தர் மன்சூர் காயம் காரணமாக உயிரிழந் தார்” என பதிவிட்டுள்ளார்.
மேலதிக விவரங்களை அவர் தெரிவிக்க வில்லை. இத்தகவலை தலிபான் தரப்பு மறுத்துள்ளது. மன்சூர் அணி யைச் சேர்ந்த அப்துல்லா சர்ஹாதி என்பவர் இது எதிரிகளின் பொய் பிரச்சாரம் எனத் தெரிவித்துள்ளார்.
ஆனால், தலிபான் தரப்பில் மன்சூர் உயிருடன் இருப்பதற்கான ஆடியோ, வீடியோ ஆதாரங்கள் வெளியிடப்படவில்லை. இதன் காரணமாக தலிபான் தரப்பு விளக் கத்தை பல்வேறு அமைப்புகளும், அரசுத் தரப்பும் ஏற்கவில்லை.
ஆப்கானிஸ்தானுக்கான வெளி நாட்டு தூதரக அதிகாரி ஒருவர் கூறும்போது, “மன்சூர் இறந்த தாக தகவல் வெளியாகியுள்ள நிலையில்,
அவர் உயிருடன் இருப் பதற்கான ஆதாரத்தை ஏன் அவர் கள் வெளியிடவில்லை. வெறும் மறுப்பு மட்டுமே ஏற்கத்தக்கதல்ல. முல்லா ஒமர் மறைவையே மறைத்தவர்கள்தானே” எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.
மன்சூர் கடந்த ஜூலை 31-ம் தேதிதான் தலிபான் தலைவராக அறிவிக்கப்பட்டார். ஆனால், முல்லா ஒமர் குடும்பத்துக்கு நெருக்கமானவராக கருதப்படும் முல்லா மொகமது ரசூல் தலைமை யில் ஒரு பிரிவினர் தனி அணியாக செயல்படுகின்றனர். இதனால், தலிபான் அமைப்பு பிளவுபட் டுள்ளது.
மன்சூர் உயிரிழந்தது உண்மை யாக இருக்கும்பட்சத்தில், ஏற் கெனவே பிளவுபட்டிருக்கும் தலிபான் அமைப்பில் அதிகாரப் போட்டி பெரும் பிரச்சினையாக உருவெடுக்கும். மேலும் மோதல் களுக்கு அது வழிவகுக்கும் எனக் கூறப்படுகிறது.
தலிபான் தலைவர் கொல்லப் பட்டுள்ளதால், அந்த அமைப்புட னான அமைதிப் பேச்சுவார்த் தைக்கு இடையூறு ஏற்பட்டுள்ள தாக ஆப்கன் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.