

மத்திய அமெரிக்க நாடான கவுதமாலாவில் உள்ள பாதுகாப்பு மிகுந்த சிறையில் கைதிகளிடையே மோதல் ஏற்பட்டது. வன்முறை பெரிய அளவில் வெடித்து, பரஸ்பரம் தாக்கிக் கொண்டதில் 17 கைதிகள் உயிரிழந்தனர்.
கவுதமாலாவில் உள்ள கிரஞ்சா பீனல் கனடா சிறை பாதுகாப்பு மிகுந்ததாகும். இங்கு, 3,100 கைதி கள் அடைக்கப்பட்டுள்ளனர். இங்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை கைதி களுக்கு இடையே மோதல் ஏற்பட்டு வன்முறையாக வெடித்தது.
கைதிகளிடம் ஏ.கே. 47 ரக துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. மோதலைக் கட்டுக்குள் கொண்டு வர அங்கு 2,000-க்கும் அதிகமான காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மோதலைப் பயன்படுத்தி சில கைதிகள் வேலியைத் தாண்டி தப்பிக்க முயன்றனர். அவர்களை காவலர்கள் பிடித்து மீண்டும் சிறையில் அடைத்தனர்.
இந்த வன்முறையில் இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர்.
கைதிகளை சிறு குழுவாகப் பிரித்து அவர்களைச் சுற்றி ஆயுதப் படை காவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
காவலர்கள் தவிர, ராணுவத்தின ரும் சிறை வளாகத்தைச் சுற்றி வளைத்துள்ளனர். சிறையைச் சுற்றி மூன்று வேலிகள் அமைக் கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று மின்வேலியாகும்.
சிறைவளாகத்தில் நடைபெற்ற கால்பந்து போட்டியின்போது இம் மோதல் ஏற்பட்டதாகக் கூறப்படு கிறது. அப்போது கோஷ்டியாகப் பிரிந்த கைதிகள் மோதிக் கொண் டனர். மோதல் ஏற்பட்ட நேரம் பார்வையாளர்கள் நேரம் என்ப தால், கைதிகளின் உறவினர்களும் அங்கு குழுமியிருந்தனர். மோதலின்போது துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டதால் உறவினர்கள் பலரும் அச்சமடைந்தனர்.
கைதிகளிடம் ஆயுதம் இருப்பது தெரிய வந்ததும், பாதுகாப்பு படையினர் உடனடியாக உள்ளே நுழையவில்லை. கைதிகளுக்கும், காவல் துறைக்கும் நேரடி மோதல் ஏற்படக் கூடாது என்பதால் உடனடி நடவடிக்கையில் காவல் துறை இறங்கவில்லை.கைதிகள் கத்தியால் குத்தப்பட்டும், துப்பாக்கி யால் சுடப்பட்டும் இறந்துள்ளனர்.
இம்மோதல் சம்பவம் தொடர் பாக விசாரணைக்கு உத்தரவிடப் பட்டுள்ளதாக உள்துறை துணை அமைச்சர் எல்மெர் சோசா தெரி வித்துள்ளார். இந்த வன்முறை, தப்பிச் செல்வதற்கான முயற்சி அல்ல எனவும் அவர் தெரிவித்தார்.
கவுதமாலா, எல் சல்வடார், ஹோண்டுராஸ் ஆகிய நாடுகளில் கோஷ்டிப் பூசல் மிக அதிகம். தெருக்களில் இவர்கள் அடிக்கடி சண்டையிட்டுக் கொள்வர். இத னால், இக்கோஷ்டியினர் கைது செய்யப்பட்டால் மோதலைத் தவிர்க்க வெவ்வேறு சிறைகளில் தான் அடைக்கப்படுவர்.