

1990ஆம் ஆண்டு இலங்கைக் கிழக்குப் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட முஸ்லிம்களை விடுதலைப் புலிகள் கொன்று புதைத்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் அந்த இடத்தைத் தோண்ட இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.
இது குறித்து போலீஸ் செய்தித் தொடர்பாளரும், கண்காணிப்பாளருமான அஜித் ரோஹனா கூறுகையில், "காத்தாங்குடியைச் செர்ந்த ஒருவர் கடந்த ஏப்ரல் மாதம் ஒரு புகார் அளித்தார். அதில் கலுவாஞ்சிக்குடி பகுதியில் இடுகாடு ஒன்று இருப்பதாகவும், அங்கு 1990ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் சுமார் 100 முஸ்லிம்களைக் கொன்று புதைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்” என்று கூறினார்.
இந்த இடத்தை ஜூலை 1ஆம் தேதி தோண்டவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பவுத்தர்கள் தொடர்ந்து முஸ்லிம்களைத் தாக்கி வருவதையடுத்து இலங்கையில் விமர்சனங்கள் எழுந்துள்ள சூழ்நிலையில் தற்போது இந்தத் தகவலும் பரபரப்பூட்டியுள்ளது.