கரோனாவை முற்றிலும் ஒழித்து விடும் நிலையில் இஸ்ரேல்: மருத்துவ நிபுணர்கள் பெருமிதம்

கரோனாவை முற்றிலும் ஒழித்து விடும் நிலையில் இஸ்ரேல்: மருத்துவ நிபுணர்கள் பெருமிதம்
Updated on
1 min read

கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் அதன் பாதிப்பை முற்றிலுமாக ஒழித்து விடும் நிலைக்கு ( ஹெர்டு இம்யூனிட்டி) அருகில் இஸ்ரேல் சென்றுவிட்டதாக அந்நாட்டு மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து இஸ்ரேலின் பார்-இலன் பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு சிகிச்சை பிரிவின் தலைவர் சிரில் கோகென் கூறும்போது, “ நாம் மந்தை நோய் எதிர்ப்பு சக்தி எனப்படும் ஹெர்டு இம்யூனிட்டிக்கு அருகில் சென்று விட்டோம் என்பதுதான் என் கருத்து. நான் ஏன் இதனை கூறுகிறேன் என்றால்?, நாம் பெரும்பாலான கட்டுப்பாடுகளை தளர்த்திவிட்டோம் இருப்பினும் கரோனா பரவும் விகிதம் மிக குறைவாக உள்ளது. கரோனா தொற்று விகிதம் 0.7 ஆக உள்ளது. வைரஸ் பரவும் வீதம் 1% குறைவாக உள்ளபோது இது ஹெர்டு இம்யூனிட்டி என்று கருதப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.

தொற்ரு குறைந்துள்ளதால் இஸ்ரேலின் 80% மக்களுக்கு தடுப்பூசிகளை செலுத்திவிட வேண்டும் என்று அந்நாட்டு அரசு தீவிரம் காட்டி வருகிறது.

ஹெர்ட் இம்யூனிட்டி என்றால் என்ன

ஹெர்ட் இம்யூனிட்டி முறை என்பது மக்கள் தொகையில் பெரும்பாலானோரைத் தொற்று நோய்க்கு எதிராக நோய்த் தடுப்பாற்றல் உள்ளவர்களாக மாற்றுதல்.

அதாவது, ஒரு கொள்ளை நோயால் பீடிக்கப்பட்டு குணமடைந்து அதன் மூலம் நோய்த் தடுப்பாற்றல் பெறுதல் அல்லது தடுப்பூசி போடுதல் மூலம் நோய்த் டுப்பாற்றல் பெறுதலாகும். இதன் மூலம் நோய்த் தடுப்பாற்றல் இல்லாதவர்களுக்கு இந்த நோய் பரவுவது தடுக்கப்படும்.

உலக சுகாதார அமைப்பு என்ன கூறுகிறது

கரோனா வைரஸை கட்டுப்படுத்துவதில் ஹெர்டு இம்யூனிட்டி என்பது மறைமுக நடவடிக்கையாகும். இத்தகைய எதிர்ப்பு சக்திகள் தடுப்பூசிகள் போடுவதன் மூலமும் கரோனா பாதிப்புக்கு உள்ளாகி அதிலிருந்து மீண்டு வருவதன் மூலம் உருவாகிறது. இந்த நிலை உருவாகும் போது நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்களும் பாதுகாக்கப்படுவர், அதாவது ஏனெனில் வைரஸ் பரவுவதற்கான சூழல் இல்லாமல் சென்றுவிடும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in