Published : 16 Apr 2021 05:28 PM
Last Updated : 16 Apr 2021 05:28 PM

பாகிஸ்தானில் சமூக வலைதளங்கள் முடக்கம்

பாகிஸ்தானில் போராட்டங்கள் தீவிரமாகி வருவதால் ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளன.

தெஹ்ரிக்-இ-லாபாயக் கட்சியின் தலைவர் சாத் ரிஸ்வி, முகமது நபியின் கார்ட்டூனை வெளியிட்டதற்கு எதிராக பிரெஞ்சு தூதரகத்தில் போராட்டத்தை முன்னெடுத்தார். இதனைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.

இந்தக் கைதை எதிர்த்து பாகிஸ்தானில் தெஹ்ரிக்-இ-லாபாயக் கட்சியைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு எதிராக போலீஸார் தாக்குதல் நடத்தினர். இதில் போலீஸார் 4 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.

இந்த நிலையில் பாகிஸ்தானில் போராட்டம் தினமும் தீவிர அடைவதைத் தொடர்ந்து அதனைத் தடுக்கும் நடவடிக்கையில் அரசு இறங்கியுள்ளது. அந்த வகையில் சமூக வலைதளங்கள் பாகிஸ்தானில் முடக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து பாகிஸ்தானின் மூத்த தொழில்நுட்ப நிபுணர் ஒருவர் கூறும்போது, “சட்டம்- ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக சில சமூக ஊடகப் பக்கங்கள் தற்காலிகமாக முடக்கி வைக்கப்பட்டுள்ளன” என்றார்.

2015ஆம் ஆண்டு முகமது நபிகள் குறித்த கேலிச் சித்திரங்களை வெளியிட்டதற்காக பாரீஸில் அமைந்துள்ள சார்லி ஹெப்டோ பத்திரிகை நிறுவனம் தாக்குதலுக்கு உள்ளானது. இதில் இந்தப் பத்திரிகையின் ஆசிரியர் ஸ்டெஃபேன் கார்போனியர் உட்பட 12 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x