இளவரசர் பிலிப்பின் இறுதிச் சடங்கில் பங்கேற்க பிரிட்டன் வந்தார் ஹாரி

இளவரசர் பிலிப்பின் இறுதிச் சடங்கில் பங்கேற்க பிரிட்டன் வந்தார் ஹாரி

Published on

பிரிட்டன் இளவரசர் பிலிப்பின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக அவரது பேரன் ஹாரி இங்கிலாந்து வந்தடைந்தார்.

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும், இளவரசருமான 99 வயதான பிலிப் ஏப்ரல் 9ஆம் தேதி காலமானார். இவரது இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் வரும் 17ஆம் தேதி நடக்க உள்ளது. இந்த நிலையில் இளவரசர் பிலிப்பின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக அவரது பேரன் ஹாரி, பிரிட்டன் வந்துள்ளார்.

இளவரசர் ஹாரி, இங்கிலாந்து அரச குடும்பத்திடமிருந்து பிரிந்து வாழ்கிறார். ஹாரியின் மனைவி மேகன் கர்ப்பமாக இருப்பதால், அவர் இறுதிச்சடங்கில் பங்கேற்கவில்லை.

இங்கிலாந்து இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் மார்கல் ஆகிய இருவரும் இங்கிலாந்து அரச குடும்பப் பதவிகளிலிருந்து விலகுவதாகக் கடந்த ஆண்டு அறிவித்தனர். இதனைத் தொடர்ந்து அரச குடும்பத்தினருடன் ஆலோசனை நடந்தது. அவர்களின் முடிவுக்கு ராணி எலிசபெத் ஒப்புதல் வழங்கினார்.

இங்கிலாந்து இளவரசர் ஹாரி, அவரின் மனைவி மேகன் மார்கல் இனிமேல் ஒருபோதும் பெருமைக்குரிய இளவரசர், இளவரசி பட்டங்களைப் பயன்படுத்த மாட்டார்கள். மக்களின் வரிப் பணத்தையும் பெறமாட்டார்கள் என்று பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in