

பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு சம்பவங்களில் தொடர்புடைய 4 தீவிரவாதிகள் நேற்று தூக்கில் இடப்பட்டனர்.
பாகிஸ்தானில் மரண தண்டனை மீதான தடை நீக்கப் பட்ட பிறகு சமீபத்திய தூக்கி லேற்றும் நடவடிக்கை இதுவாகும்.
இந்த நால்வர் மீதும், அப்பாவி மக்களை கொன்றது, தற்கொலை படையினருக்கு பயிற்சி மற்றும் உதவிகள் அளித்தது, பிணையத் தொகைக்காக ஆட்களை கடத் தியது, பயங்கரவாத அமைப் புகளுக்கு நிதியுதவி உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டி ருந்தன. இதனை விசாரித்த ராணுவ நீதிமன்றம் இவர்களுக்கு மரண தண்டனை விதித்து. இதற்கு பாகிஸ்தான் ராணுவ தளபதி ரஹீல் ஷெரீப் இம்மாத தொடக்கத்தில் ஒப்புதல் அளித்தார்.
இந்நிலையில் கைபர் பக்துன் கவா மாகாணம், கொகத் நகரில் உள்ள மத்திய சிறையில் இவர் களுக்கு நேற்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
கொகத் மாவட்ட காவல்துறை அதிகாரி சொகய்ப் அஷ்ரப் இதனை நேற்று உறுதி செய்தார்.
பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள ராணுவ பொது பள்ளியில் கடந்த ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி தலிபான் தீவிரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர். இதில் 132 மாணவர்கள் உட்பட 145 பேர் உயிரிழந்தனர். உலகை உலுக்கிய இத்தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானில் மரண தண்ட னை மீதான தடை நீக்கப்பட்டது.
இத்தாக்குதலில் தொடர் புடைய 4 தீவிரவாதிகளுக்கு கடந்த 3-ம் தேதி கொகத் மத்திய சிறையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
பெஷாவர் பள்ளி மீதான தாக்குதலுக்குப் பிறகு 250-க்கும் மேற்பட்டோர் தூக்கில் இடப் பட்டுள்ளதாக பாகிஸ்தான் மனித உரிமை ஆணைய அதிகாரி ஒருவர் கூறினார்.
பாகிஸ்தானில் விசாரணை அமைப்புகளில் உள்ள குறை பாடுகளை சுட்டிக்காட்டி, மரண தண்டனைக்கு மனித உரிமை அமைப்புகள் எதிர்ப்பு தெரிவிக் கின்றன. என்றாலும் மரண தண்ட னைக்கு மீண்டும் தடை விதிக்க பாகிஸ்தான் அரசு மறுத்து வருகிறது.
பாகிஸ்தான் சிறைகளில் மரண தண்டனை கைதிகள் சுமார் 8 ஆயிரம் பேர் உள்ளனர்.