ஐஎஸ் அமைப்புக்கு எதிரான போருக்கு ஜெர்மனி ராணுவ உதவி

ஐஎஸ் அமைப்புக்கு எதிரான போருக்கு ஜெர்மனி ராணுவ உதவி
Updated on
1 min read

ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு எதிரான போருக்கு ராணுவ உதவி அளிப்பதற்கு ஜெர்மனி அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கியது.

பாரீஸில் கடந்த மாதம் ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலை அடுத்து ராணுவ உதவி வழங்கும்படி பிரான்ஸ் வேண்டுகோள் விடுத்திருந்தது. அதையேற்று ராணுவ உதவி வழங்க ஜெர்மனி அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. விரைவில் சிரியா, இராக்குக்கு உளவு ஜெட் விமானங்கள், போர்க் கப்பல், 1200 படை வீர்கள் அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.

அமைச்சரவையின் முடிவுக்கு ஜெர்மன் நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்க வேண்டும். பிரதமர் ஏஞ்சலா மெர்க்கலின் மகா கூட் டணி அரசுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இருப்ப தால் ராணுவ உதவிக்கு ஒப்புதல் நிச்சயம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெர்மனியின் ராணுவ உதவி ஓர் ஆண்டுக்கு கிடைக்கும். இதற் காக சுமார் 14.2 கோடி டாலர் செலவாகும் என மதிப்பிடப்பட் டுள்ளது. ராணுவ உதவி அடுத்த ஆண்டு நீட்டிக்கப்படவும் வாய்ப்பு உள்ளது.

ஐஎஸ் அமைப்புக்கு எதிரான போரில் ராணுவ ரீதியில் என்ன உதவி தேவையோ அதை செய் கிறோம். அரசியல் ரீதியாகவும் ஆதரவு தரத் தயார். ஐஎஸ் போன்ற எதிரிகள் விஷயத்தில் பொறுமை தேவை என்று ஜெர்மனி வெளி யுறவு அமைச்சர் பிராங்க் வால்டர் ஸ்டைன்மீயர் தெரிவித்தார்.

ஜெர்மனியின் உளவு விமானங் கள் மிகத் துல்லியமான படங் களை அனுப்பி வைக்கும் திறன் கொண்டவை. இரவு பகல் என் றில்லாமல், பருவநிலை எப்படி யிருந்தாலும் படம் எடுத்து தரைக் கட்டுப்பாட்டு நிலையத்துக்கு அந்த விமானங்கள் அனுப்பி வைக்கும். -ஏஎப்பி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in