

வடகிழக்கு சீனாவில் 2 வெவ்வேறு நிலக்கரிச் சுரங்க விபத்துகளில் 36 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
வடகிழக்கு சீனாவின் லியவோனிங் மாகாணம், ஹுலுடாவோ நகரில் சிங்லி என்ற நிலக்கரிச் சுரங்கம் உள்ளது. இந்த சுரங்கத்தில் நேற்று முன்தினம் தீவிபத்து ஏற்பட்டது. இதையடுத்து சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணி நடந்தது. நேற்று முன்தினம் நள்ளிரவு வரை 27 பேர் மீட்கப் பட்டனர். இவர்களில் 13 பேர் சம்பவ இடத்திலும் 4 பேர் மருத்துவமனை யிலும் இறந்தனர். 10 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வடகிழக்கு சீனாவில் மற்றொரு சம்பவமாக, ஹெய்லாங்ஜியாங் மாகாணம், ஹெகாங் நகரில் உள்ள ஜியாங்யாங் நிலக்கரிச் சுரங்கத்தில் கடந்த புதன்கிழமை வெடிவிபத்து ஏற்பட்டது. இதையடுத்து சுரங்கத் தில் தீப்பற்றியது. இதில் 33 தொழிலாளிகள் உயிர்தப்பினர். உள்ளே சிக்கிய 19 தொழி லாளர்கள் உடல்கருகி இறந்தனர்.
சீனாவில் நிலக்கரிச் சுரங்க விபத்துகளும் வழக்கமானதாக உள்ளது.