

கலிஃபோர்னியாவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு குறித்து இங்குள்ள முஸ்லிம்களுக்கு தெரியும். ஆனால் அவர்கள் அதனை வெளிப்படுத்தவில்லை. ஏனென்றால் அது அவர்களது கலாச்சாரம் என்று டிரம்ப் பேசியுள்ளார்.
குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளரான டோனால்ட் டிரம்ப் நேற்று நடந்த பிரச்சார பேரணியில் இவ்வாறு பேசினார். இது குறித்து அவர் மேலும் கூறும்போது, "அமெரிக்க முஸ்லிம்கள் ஒருவரை ஒருவர் கண்காணித்துக்கொள்ள வேண்டும்.
கலிஃபோர்னியாவில் நடந்த அந்தத் துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து நமது முஸ்லிம்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். ஆனால் அவர்கள் அதனை வெளிப்படுத்தவில்லை. ஏனென்றால் அது அவர்களது கலாச்சாரம். பொதுவாகவே அவர்களுக்கும் அவர்களது கலாச்சாரத்துக்கும் எதோ ஒரு பிரச்சினை இருக்கத் தான் செய்கிறது." என்றார்.
அமெரிக்காவில் முஸ்லிம் குடியேற்றத்துக்கு முழுமையாக தடை விதிக்க வேண்டும் என்று டோனால்டு டிரம்ப் ஏற்கெனவே பேசி சர்ச்சைக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.