

”திருமதி இலங்கை “ 2021 ஆம் ஆண்டு அழகி போட்டியில் பட்டம் வென்ற புஷ்பிகா டி சில்வாவிடமிருந்து கிரீடத்தை பறித்த கரோலின் ஜூரி கைது செய்யப்பட்டிருக்கிறார்.
” திருமதி இலங்கை” 2021 ஆம் ஆண்டுக்கான அழகிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடந்தது.
இப்போட்டியில் புஷ்பிகா டி செல்வா வெற்றியாளராக அறிவிக்கப்பட்டு கிரீடம் சூட்டப்பட்டது. இந்த நிலையில் புஷ்பிகாவுக்கு கிரீடம் சூட்டிய கரோலின் ஜூரி,மைக்கை எடுத்து ‘‘புஷ்மிகா இப்போட்டிக்கான விதிமுறையை மீறிவிட்டார். இப்போட்டியில் திருமணம் ஆனவர்தான் கலந்து கொள்ள வேண்டும். புஷ்மிகா விவாகரத்தானவர், எனவே அவரிடமிருந்து பட்டத்தை பறித்து இரண்டாம் இடம் பிடித்தவருக்கு சூட்டப்படுகிறது’’ என்று கூறி புஷ்மிகாவின் தலையிலிருந்து கிரீடத்தை பறித்து இரண்டாம் இடம் பிடித்தவருக்கு சூட்டினார்.
கரோலினின் செயலை கண்டு அதிர்ச்சி அடைந்த புஷ்மிகா மேடையிலிருந்து அழுது கொண்டே சென்றார். இந்தச் சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் புஷ்பிகாவுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் குரல்கள் எழுந்தன.
இந்த நிலையில் தனக்கு விவகாரத்து ஆகவில்லை, தன் கணவரிடமிருந்து பிரிந்து வாழ்வதாக புஷ்மிகா விளக்கம் அளித்தார். இதனைத் தொடர்ந்து மீண்டும் பட்டம் அவருக்கு வழங்கப்பட்டது.
புஷ்மிகாவிடமிருந்து பட்டத்தை பறித்த கரோலின் ஜூரி கைது செய்யப்பட்டடிருக்கிறார் அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.