Published : 08 Apr 2021 09:38 PM
Last Updated : 08 Apr 2021 09:38 PM

கரோனா தடுப்பூசியால் லண்டனில் தொற்று 60% குறைந்தது: ஆய்வில் தகவல்

லண்டன்

இங்கிலாந்தில் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட பணி தொடங்கியதிலிருந்து கரோனா தொற்று மற்றும் நோய் தீவிரத்தன்னமை குறைந்துள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லண்டனில் இயங்கும் இம்பீரியல் கல்லூரியில் உள்ள ஆய்வாளர்கள் வெளியிட்ட ஆய்வின் முடிவில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது, "கரோனா கட்டுப்பாடுகள் நோய் பரவும் தன்மையை குறைத்துள்ளது. கரோனா தடுப்பூசி பணி செலுத்துவதன் காரணமாக நோய் பரவல் மற்றும் நோயின் தீவிரம் , மருத்துவமனைகளில் இறப்பு விகிதம் ஆகியவை பெருமளவு குறைந்துள்ளது. 60% நோய் தொற்று தடுப்பூசி காரணமாக குறைந்துள்ளது. 60 வயதுக்கும் மேற்பட்டவர்கள் கரோனா தடுப்பூசி காரணமாக பயனடைந்துள்ளனர்" என்று தெரிவிக்கப்பத்துள்ளது.

கரோனா தொற்று பரவல் குறைந்துள்ளதன் காரணமாக பிரிட்டனில் அடுத்தவாரம் முதல் தளர்வுகள் அமல்படுத்தப்பட உள்ளன.

உலகம் முழுவதும் கரோனா பரவல் மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. இதனைக் கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளிலும் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சுமார் 13 கோடிக்கும் அதிகமானோர் உலகம் முழுவதும் கரோனா பரவலால் பாதிக்கப்படுள்ளனர். இதில், 10 கோடிகும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x