

இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியதாக சிரியா அரசு குற்றம் சுமத்தியுள்ளது.
இதுகுறித்து சிரிய அரசு ஊடகம் தரப்பில், “ சிரியாவின் தலை நகர் டமாஸ்கஸ் அருகே தென் பகுதியில் இஸ்ரேல் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். இதில் பலர் காயமடைந்தனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிரியாவில் உள்ள ராணுவ தளங்களை மையமாக வைத்து இந்தத் தாக்குதலை இஸ்ரேல் நடத்தியுள்ளதாகவும் பிரிட்டனை மையமாக கொண்டு செயல்படும் போர் கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது.
சிரியாவில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக அந்நாட்டு அரசு நடத்தும் உள்நாட்டுப் போருக்கு ஈரான் முழு ஆதரவு அளித்துள்ளது. மேலும் ஈரான் தனது நாட்டு ராணுவ வீரர்களை சிரியா பாதுகாப்பு படைக்கு ஆதரவாக சண்டையிட அனுப்பி வைத்துள்ளது.
இஸ்ரேலை பொறுத்தவரை அந்த நாடு மத்திய கிழக்கு நாடுகளில் ஈரானை தங்களுக்கான அச்சுறுத்தல் கொண்ட நாடாக கருதுகிறது. இந்தநிலையில் சிரியாவின் அலெப்போ நகரில் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.