

தமிழ்ப் போராளிகளுக்கு எதிரான 30 ஆண்டுகால போரினால் ஏற்பட்டுள்ள மன உளைச்சலைப் போக்க சுமார் 3 லட்சம் இலங்கை ராணுவத்தினருக்குத் தியானப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
இதனை இலங்கை ராணுவ ஊடக இயக்ககத்தைச் சேர்ந்த பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர தெரிவித்தார். இதற்காக ஒரு தனி கட்டிடமும் கட்டப்படவுள்ளதாகவும் அதற்கான அடிக்கல் நாளை நடப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
"ராணுவத்தினருக்கு வெறும் ஆயுதப் பயிற்சி மட்டுமே அளிக்கப்படுகிறதா என்று அடிக்கடி கேள்விகள் எழுகிறது, ஆகவே தியானப்பயிற்சி அவர்களது ஆன்மீக உயர்வுக்கும் வழிவகை செய்யும்” என்றார் அவர்.
இதற்காக தலைநகர் கொழும்புவின் வடக்குப் பகுதியில் உள்ள கம்ப்பா என்ற மாவட்டத்தில் புதிய கட்டிடம் கட்டப்படுவதாகவும் இதில் ஒரே சமயத்தில் 100 படைவீரர்கள் தியானப்பயிற்சி பெற முடியுமென்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஆசியாவிலேயே ராணுவ வீரர்களுக்கு தியான மண்டபம் கட்டப்படுவது இதுவே முதல் முறையாகும் என்கிறார் ஜெயவீர.
ஐநா மதிப்பீட்டின் படி விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் சுமார் 1 லட்சம் பேர் கொல்லப்பட்டுள்ளனர.