

தென்கிழக்கு ஏமனில் 2 ராணுவ நிலைகளை குறிவைத்து அல்காய்தா தீவிரவாதிகள் நேற்று காலை தாக்குதல் நடத்தினர். இதில் 15 ராணுவ வீரர்கள், 19 ஜிகாதிக்கள் உயிரிழந்தனர். மேலும் பொதுமக்கள் பலர் காயமடைந்தனர்.
ஏமன் ராணுவ மற்றும் மருத்துவ வட்டாரங்கள் இத்தகவலை தெரிவித்தன.
ஏமனின் தென்கிழக்கில் உள்ள ஹத்ரமாத் மாகாணத் தில் அல்காய்தா தீவிரவாதிகளின் ஆதிக்கம் மிகுந்துள்ளது. இம் மாகாணத்தில் தலைநகரான முகல்லா, இவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்நிலையில் ஏமன் ராணுவ அதிகாரி ஒருவர் நேற்று கூறும் போது, “ஹத்ரமாத் மாகாணத்தில் ஷிபம் நகருக்கு அருகில் 2 ராணுவ நிலைகளை குறிவைத்து அல் காய்தா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 15 ராணுவ வீரர்கள், 19 ஜிகாதிக்கள் உயிரிழந் தனர்” என்றார்.