Published : 28 Mar 2021 03:15 AM
Last Updated : 28 Mar 2021 03:15 AM

இந்திய மக்களுக்கு செலுத்தப்பட்ட எண்ணிக்கையை விட கரோனா தடுப்பூசி அதிக அளவில் ஏற்றுமதி: ஐ.நா. சபை பொதுக்கூட்டத்தில் இந்திய தூதர் தகவல்

நியூயார்க்

இந்திய மக்களுக்கு தடுப்பூசி போட்ட எண்ணிக்கையை விட அதிக அளவில் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது என்று ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா தெரிவித்துள்ளது.

சர்வதேச அளவில் கரோனா-19 தடுப்பூசி அனைத்து நாடுகளுக் கும் கிடைக்கச் செய்யும் நட வடிக்கையில் இந்தியா தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் 180 நாடுகளை விட அதிக அளவில் தனது பங்களிப்பை இந்தியா அளித்து வருகிறது என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக் கூட்டத்தில் ஐ.நா.வுக்கான இந்தியதூதர் கே. நாகராஜ் நாயுடு குறிப்பிட்டார். 2021-ம் ஆண்டு ஒரு நம்பிக்கையுடன் பிறந்துள்ளது. அறிவியல் சமூகம் கரோனா பரவலைக்கட்டுப்படுத்த பலதரப்பட்ட தடுப் பூசிகளை கண்டுபிடித்துள்ளது.

கரோனா பரவலைத் தடுக்க தடுப்பூசி கண்டுபிடித்தாகி விட்டது. ஆனால் இப்போது அதுஅனைத்து மக்களுக்கும் கிடைப்பதில்தான் பிரச்சினையும், அது கட்டுபடியாகும் விலையில் விநியோகிப்பதும்தான் பிரச்சினையாகியுள்ளது. அனைத்துக்கும் மேலாக இதன் விநியோகமும் பெரும் சிக்கலாக உள்ளது. நாடுகளிடையிலான ஒத்துழைப்பு இல்லாததால் ஏழ்மை நாடுகள்தான் மிக அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளன என்று நாகராஜ் குறிப்பிட்டார்.

கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதில் சர்வதேச அளவில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. 6 மாதங்களில் 30 கோடி பேருக்கு தடுப்பூசி போட வேண்டும் என்ற இலக்கை எட்டும் அதேசமயம் 70 நாடுகளுக்கு தடுப்பூசிகளைஏற்றுமதி செய்துள்ளது என்றுஅவர் கூறினார். இந்தியர்களுக்கு தடுப்பூசி போட்ட எண்ணிக்கையைவிட அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவில் இரண்டு வகையான தடுப்பூசி மருந்து தயாரிக் கப்பட்டு அதற்கு அனுமதி பெறப்பட்டுள்ளது. இது தவிர 30 விதமான தடுப்பூசி மருந்துகள் பல்வேறு கட்ட சோதனைகளில் உள்ளன என்றும் அவர் கூறினார். ஐக்கிய நாடுகள் சபையின் அரசி யல் தீர்மானத்தின் கீழ் அனைவருக்கும் கட்டுப்படியாகும் விலை யில் தடுப்பூசி மருந்து கிடைக்கச் செய்வதாகும்.

இன்னமும் சில நாடுகளுக்கு தடுப்பூசி மருந்து கிடைக்காமல் இருப்பது கவலை அளிப்பதாக உள்ளது. இதற்கு அனைத்து நாடுகளும் தடுப்பூசி மருந்து உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். அத்துடன் பிற நாடுகளுக்கு அது கிடைக்கச் செய்ய வேண்டும். அப்போதுதான் உலக அளவில் கரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் இலக்கை ஒருங்கிணைந்த வகையில் எட்ட முடியும் என்று நாகராஜ் நாயுடு குறிப்பிட்டார். கடந்த மாதம் 2 கோடி தடுப்பூசி மருந்துகள் பிற நாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x