ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானம்: 22 நாடுகள் ஆதரவுடன் நிறைவேற்றம்: வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்கவில்லை

ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானம்: 22 நாடுகள் ஆதரவுடன் நிறைவேற்றம்: வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்கவில்லை
Updated on
1 min read

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நேற்று நிறைவேறியது. இந்த வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்கவில்லை.

கடந்த 25 ஆண்டுகளாக நீடித்த இலங்கை உள்நாட்டுப் போர் 2009-ம் ஆண்டில் முடிவுக்கு வந்தது. இறுதிக்கட்ட போரின்போது சுமார் 40,000-க்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டதாக சர்வதேச மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.

6 நாடுகள்

இந்நிலையில் இலங்கை உள்நாட்டுப் போரின்போது மனித உரிமைகள் மீறப்பட்ட தாகவும் இதுதொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரி ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் பிரிட்டன், ஜெர் மனி உள்ளிட்ட 6 நாடுகள் தீர்மானம் கொண்டு வந்தன.

கடந்த 18-ம் தேதி முதல் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்றது.

பிரிட்டன், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் இலங்கை அரசை கடுமையான விமர்சித்தன. இதைத் தொடர்ந்து நேற்று நடந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் மொத்தமுள்ள 47 நாடுகளில் 22 நாடுகள் தீர்மானத்துக்கு ஆதர வாக வாக்களித்தன. ரஷ்யா, சீனா, பாகிஸ் தான், வங்கதேசம் உள்ளிட்ட 11 நாடுகள் எதிராக வாக்களித்தன. இந்தியா, ஜப்பான், இந்தோனேசியா, நேபாளம் உள்ளிட்ட 14 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் நடு நிலை வகித்தன. பெரும்பான்மை நாடுகளின் ஆதரவால் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானம் மூலம் இலங்கை அரசுக்கு சர்வதேச அளவில் அழுத்தம் கொடுக்க முடி யும். தேவைப்பட்டால் இலங்கைக்கு ஐ.நா. அமைதிப் படையை அனுப்ப வாய்ப்புள்ளதாக வும் கருதப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in