கணினி தகவல் பாதுகாப்பு, கலாச்சாரம் உட்பட 3 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து: இந்தியா, மலேசியா கூட்டறிக்கையில் தகவல்

கணினி தகவல் பாதுகாப்பு, கலாச்சாரம் உட்பட 3 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து: இந்தியா, மலேசியா கூட்டறிக்கையில் தகவல்
Updated on
2 min read

கணினி தகவல் பாதுகாப்பு, கலாச் சாரம், அரசு திட்டங்களை கண் காணித்தல் ஆகிய 3 முக்கிய ஒப்பந்தங்களில் இந்தியாவும் மலேசியாவும் கையெழுத்திட் டுள்ளன. பாதுகாப்புத் துறையில் இரு நாடுகளுக் கிடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் முடிவு செய்துள்ளன.

மலேசியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமர் நஜீப் ரசாக்கை நேற்று சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பின்போது, இரு தலைவர்கள் முன்னிலையில் கணினி தகவல் பாதுகாப்பு (சைபர் செக்யூரிட்டி), அரசு திட்ட கண்காணிப்பு, ஒப்படைப்பில் ஒத்து ழைப்பு மற்றும் கலாச்சார பரிமாற்ற நிகழ்ச்சிகள் (2015-2020) ஆகிய 3 முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.

பின்னர் இருவரும் செய்தி யாளர்களுக்கு கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:

சர்வதேச பிரச்சினையாக உருவெடுத்துள்ள தீவிரவாதத்தை எதிர்த்துப் போரிடவும் பாதுகாப்புத் துறையில் இரு நாடுகளுக்கிடையிலான உறவை மேலும் வலுப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்த பிராந்தியத்தில் நவீன கடல்சார் பாதுகாப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட வசதிகள் மேம்படுத்தப்படும். மேலும் கூட்டு ராணுவ பயிற்சியை மேம்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதவிர, கணினி தகவல் திருட்டு முக்கிய பிரச்சினையாக உருவெடுத்துள்ள நிலையில், கணினி தகவல் அல்லது தகவல் தொழில்நுட்ப பாதுகாப்பு துறையில் இணைந்து பணியாற்ற திட்டமிட்டுள்ளோம்.

உள்கட்டமைப்புத் துறையில் மலேசியா சிறந்து விளங்குகிறது. இந்தியாவில் பல்வேறு சாலை கட்டுமானத் திட்டங்களை மலேசியா நிறுவனங்கள் நிறைவேற்றி உள்ளன. எனினும் இத்தகைய திட்டங்களில் அந்த நிறுவனங்கள் மேலும் கூடுதல் கவனம் செலுத்து வதுடன், மேக் இன் இந்தியா மற்றும் ஸ்மார்ட் சிட்டி உள்ளிட்ட இந்திய திட்டங்களிலும் மலேசியா ஒத்துழைப்பு தர வேண்டும்.

தீவிரவாதம் மற்றும் அடிப்படை வாதத்துக்கு எதிராக மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் போராடி வரு கிறார். இவ்வாறு மோடி பேசினார்.

இரு தலைவர்களின் சந்திப் புக்குப் பிறகு வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், “தீவிரவாதம் எந்த வடிவில் இருந்தாலும் அது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தீவிரவாத அமைப்புகளையும், தீவிரவாத செயலில் ஈடுபடுகிறவர் களையும் நீதியின் முன் நிறுத்த அனைத்து நாடுகளும் ஒத்துழைப்பு தர வேண்டும். தீவிரவாதத்தை எதிர்த்துப் போரிடுவது தொடர்பாக இரு நாடுகளுக்கிடையே நடை பெற்று வரும் பேச்சுவார்த்தை வரவேற்கத்தக்கது” என கூறப்பட்டுள்ளது.

நுழைவு வாயில் திறப்பு

மலேசியாவில் ‘லிட்டில் இந்தியா’ பகுதியில் கட்டப்பட்டுள்ள தோரணா நுழைவு வாயிலை பிரதமர் நரேந்திர மோடியும் மலேசிய பிரதமர் நஜீப் ரசாக்கும் கூட்டாக நேற்று திறந்து வைத்தனர்.

பின்னர் இதுகுறித்து மோடி கூறும்போது, “தோரணா நுழைவு வாயில் என்பது கல்லில் செதுக்கப் பட்ட ஓவியம் மட்டுமல்ல. இது இரு நாடுகளையும் இணைக்கும், இரு நாட்டு கலாச்சாரத்தையும் பறைசாற்றும் சின்னம் ஆகும். இது மலேசியாவுடனான உறவுக்கு மைல் கல்லாக இருக்கும்” என்றார்.

நஜீப் ரசாக் கூறும்போது, “இரு நாட்டு மக்களுக்கிடையிலான உறவின் சின்னமாக இந்த நுழைவு வாயில் விளங்கும். மேலும் இரு நாடுகளுக்கிடையிலான நீண்டகால உறவை பறைசாற்றும் வகையிலும் இருக்கும்” என்றார்.

கோலாலம்பூரில் லிட்டில் இந்தியா திட்டம் அறிமுகம் செய்யப் பட்டதைக் குறிக்கும் வகையில், இந்தியா சார்பில் தோரணா நுழைவு வாயில் கட்டிக் கொடுக்க முடிவு செய்யப்பட்டது. சாஞ்சியில் உள்ள புத்த ஸ்தூபியை நினைவுகூரும் வகையில் ரூ.7.15 கோடி செலவில் வடிவமைக்கப்பட்டுள்ள இதில், பழங்கால இந்திய மற்றும் இஸ் லாமிய கலைநயமிக்க ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in