பாகிஸ்தான் உள்ளிட்ட 4 நாடுகளின் பெண்களை திருமணம் செய்ய கூடாது: சவுதி அரேபிய ஆண்களுக்கு தடை

பாகிஸ்தான் உள்ளிட்ட 4 நாடுகளின் பெண்களை திருமணம் செய்ய கூடாது: சவுதி அரேபிய ஆண்களுக்கு தடை
Updated on
1 min read

பாகிஸ்தான், வங்கதேசம், சாத் மற்றும் மியான்மர் ஆகிய 4 நாடுகளைச் சேர்ந்த 5 லட்சம் பெண்கள்சவுதி அரேபியாவில் வசிப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த 4 நாடுகளைச் சேர்ந்த பெண்களை திருமணம் செய்ய சவுதி அரேபிய ஆண்களுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த 4 நாடுகளின் பெண்களை திருமணம் செய்ய விரும்பும் சவுதி அரேபிய ஆண்கள் இனி கடும் கட்டுப்பாடுகளை சந்திக்க நேரிடும் என அந்நாட்டின் மெக்கா நகர காவல் துறை இயக்குநர் மேஜர் ஜெனரல் அசாப் அல்-குரேஷி கூறியதாக செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

பாகிஸ்தான் உள்ளிட்ட 4 நாடுகளின் பெண்களை திருமணம் செய்ய விரும்பும் ஆண்கள்முறைப்படி அரசுக்கு விண்ணப் பிக்க வேண்டும். இதைப் பரிசீலித்து அனுமதி வழங்கினால் மட்டுமே திருமணம் செய்து கொள்ள முடியும். விவாகரத்து பெற்ற ஆண்கள் அடுத்த 6 மாதங்கள் வரை வேறு ஒரு பெண்ணைதிருமணம் செய்து கொள்வதற்கு விண்ணப்பிக்க முடியாது. 25 வயதுக்கு மேற்பட்டவராக இருப்பதுடன் அதை உறுதிப்படுத்தும் வகையில் மாவட்ட மேயரால் வழங்கப்பட்ட ஆவணத்தை சமர்ப் பிக்க வேண்டும். அடையாள ஆவணம், குடும்பத்தினர் பற்றிய விவரங்களையும் தெரிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in