நேபாள பேருந்து விபத்தில் 30 பேர் பலி; 35 பேர் காயம்

நேபாள பேருந்து விபத்தில் 30 பேர் பலி; 35 பேர் காயம்
Updated on
1 min read

நேபாளத்தின் வடமேற்கு மலைச்சாலையில் அதிக பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து கட்டுப்பாடின்றி 150 மீட்டர் பள்ளத்தில் உருண்டு விபத்துக்குள்ளானதில் 30 பேர் பலியாகினர். மேலும் 35 பேர் காயமடைந்தனர்.

நேபாளத்தில் கடும் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதால் அதிக பேருந்துகள் இயக்கப்பட முடியவில்லை, இதனால் குறைந்த அளவே பேருந்துகள் இயங்குவதால் மக்கள் நெரிசல் அபரிமிதமானதாக, அபாயகரமானதாக இருந்து வருகிறது. படிகளில் தொங்கிக் கொண்டும், பஸ்ஸின் மேற்கூரையில் ஆபத்தான முறையில் பயணம் செய்தும் வருகின்றனர்.

இந்நிலையில் அவ்வாறான நெரிசல் மிக்க பேருந்து ஒன்று ராம்ச்சே கிராமம் அருகே மலைச்சாலையில் கட்டுப்பாடு இழந்து 500 அடி பள்ளத்தில் உருண்டு விபத்துக்குள்ளானது.

சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸ், மற்றும் மீட்புக் குழுவினர் கிராமத்தினர் உதவியுடன் பேருந்தில் சிக்கியவர்களையும் இறந்தோர் உடல்களையும் மீட்டனர்.

தலைநகர் காத்மாண்டுவிற்கு 80 கிமீ வடமேற்கே இந்த கோர விபத்து நிகழ்ந்தது.

நேபாளத்தின் புதிய அரசியல் சாசனத்தை மாதேசிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர், இதனால் இந்திய-நேபாள எல்லையில் பதற்றம் நிலவி வருவதால் எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் நேபாளத்துக்குள் செல்ல முடியவில்லை.

இதனால் கடும் எரிபொருள் தட்டுப்பாட்டினால் அன்றாட போக்குவரத்து உட்பட இயல்பு வாழ்க்கை அங்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in