Published : 16 Mar 2021 10:01 AM
Last Updated : 16 Mar 2021 10:01 AM

பக்கவிளைவாக ரத்த உறைவு பிரச்சினை: ஆஸ்ட்ராஜெனிக்கா தடுப்பூசிக்கு நோ சொன்ன ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ்

ஆஸ்ட்ராஜெனிக்கா தடுப்பூசியால் ரத்தம் உறைவுப் பிரச்சினை ஏற்படுவதாகக் கூறி, அந்தத் தடுப்பூசிக்கு ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் நாடுகள் தடை விதித்துள்ளன.

அவற்றைத் தொடர்ந்து ஸ்பெயின், போர்ச்சுகல், லாட்வியா, ஸ்லோவேனியா போன்ற நாடுகளும் ஆஸ்ட்ராஜெனிக்கா தடுப்பு மருந்துகளுக்கு தடை விதித்துள்ளன.

ஆனால், உலக சுகாதார அமைப்பும், ஐரோப்பிய மருந்துகள் முகமையும் (EMA) இந்தத் தடுப்பூசி பாதுகாப்பானது என்று தெரிவித்து வருகின்றன.

உலகளவில் கரோனாவை எதிர்கொள்ள ஆஸ்ட்ராஜெனிக்கா, பைசர், மாடர்னா, இந்தியத் தயாரிப்பான கோவேக்ஸின், கோவிஷீல்டு, ரஷ்ய தயாரிப்பான ஸ்புட்னிக் 5 உள்ளிட்ட பல்வேறு தடுப்பூசிகள் புழக்கத்தில் உள்ளன.

இந்நிலையில், திடீரென உலகநாடுகள் சில ஆஸ்ட்ராஜெனிக்கா தடுப்பூசிக்கு எதிர்ப்பு தெரிவிப்பதால் தடுப்பூசி திட்டத்தில் பின்னடைவை ஏற்படுத்தக்கூடும் என அஞ்சப்படுகிறது.

ஐரோப்பாவைத் தாண்டி இந்தோனேசியாவிலும் ஏற்கெனவே ஆர்டர் கொடுக்கப்பட்ட இத்தடுப்பூசியைப் பெற தயக்கம் காட்டப்பட்டு வருகிறது.

இது குறித்து உலக சுகாதார அமைப்பின், முதன்மை விஞ்ஞானி சவுமியா செல்லமுத்து கூறும்போது, மக்களை அச்சுறுத்த விரும்பவில்லை. இப்போதைக்கு உலக நாடுகள் ஆஸ்ட்ராஜெனிக்கா தடுப்பூசி பயன்பாட்டைத் தொடரலாம் என்றே நாங்கள் அறிவுறுத்துகிறோம். இதுவரை இந்தத் தடுப்பூசியை செலுத்துவோருக்கு ஏற்பட்ட ரத்த உறைதல் பிரச்சினை குறித்து ஏதும் அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.
இந்நிலையில், நாளை ஐரோப்பிய மருந்துகள் முகமை (EMA), இது குறித்து சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடத்தவுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x