கேள்வி கேட்டதால் கோபம்: தாய்லாந்தில் பத்திரிகையாளர்கள் மீது கிருமி நாசினி தெளித்த பிரதமர்

தாய்லாந்தின் பாங்காக் நகரில் பத்திரிகையாளர்கள் மீது கிருமி நாசினி தெளிக்கும் பிரதமர் பிரயூத் சான் ஓச்சா.
தாய்லாந்தின் பாங்காக் நகரில் பத்திரிகையாளர்கள் மீது கிருமி நாசினி தெளிக்கும் பிரதமர் பிரயூத் சான் ஓச்சா.
Updated on
1 min read

கேள்வி கேட்டதால் கோபமடைந்த தாய்லாந்து பிரதமர் பிரயூத் சான் ஓச்சா பத்திரிகையாளர்கள் மீது கிருமி நாசினியை (சானிடைசர்) அடித்து தனது கோபத்தை வெளிப்படுத்தினார். பிரதமரின் இந்தச் செயலுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

தாய்லாந்து பிரதமர் பிரயூத் சான் ஓச்சா அண்மையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது 7 வருடங்களுக்கு முன்பு நடந்தபோராட்டத்தில் ஏற்பட்ட கிளர்ச்சிக்காக 3 அமைச்சர்கள் கடந்த வாரம் கைது செய்யப்பட்டனர். எனவே காலியான அமைச்சரவை இடங்கள் எப்போது நிரப்பப்படும் என்று பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பினர்.

ஆனால் பிரதமர் பிரயூத் சான் ஓச்சா இந்தக் கேள்விக்குப் பதில் அளிக்கவில்லை. தொடர்ந்து பேசிய அவர், "வேறு எதாவது கேள்வி உள்ளதா? எனக்கு தெரியாது. நான் இன்னும் அதைக் காணவில்லை. இதைத்தான் ஒரு நாட்டின் பிரதமர் முதலில் தெரிந்து வைத்து கொள்ள வேண்டுமா” என்று கேட்டார். இதைத் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பவே கோபமடைந்த அவர், பத்திரிகையாளர்கள் மீது கிருமி நாசினியைத் தெளித்தார். கேள்வி கேட்ட பத்திரிகையாளர் மட்டுமல்லாமல் வரிசையில் உட்கார்ந்திருந்த அனைத்து பத்திரிகையாளர்கள் மீதும் கிருமி நாசினியைத் தெளித்து விட்டு அந்த அறையிலிருந்து அவர் வெளியேறினார்.

கடும் கண்டனம்

இந்த நிகழ்வுக்கு பல்வேறு சமூக ஆர்வலர்கள் கடும் கண்ட னம் தெரிவித்துள்ளனர். தாய்லாந்து ராணுவத்தின் முன்னாள் தளபதியாக இருந்தவர் பிரதமர் பிரயூத் சான் ஓச்சா என்பது குறிப்பிடத்தக்கது. பிரயுத் சான் ஓச்சா பத்திரிகையாளர்களிடம் இப்படி கரடுமுரடாக நடந்து கொள்வது இது முதல் முறை அல்ல.‌பதிலளிக்க முடியாத வகையில் கேள்வி கேட்கும் பத்திரிகையாளர் களை தலையில் தட்டுவது, காதைப் பிடித்து இழுப்பது, அதுமட்டுமின்றி ஒருமுறை பத்திரிகை யாளர்கள் சந்திப்பில் தனது கட்அவுட்டை வைத்து விட்டு வெளியேறியது போன்ற சர்ச்சைக் குரிய செயல்களில் அவர் ஏற்கெனவே ஈடுபட்டுள்ளார் என் பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in