உலகம்
70 மில்லியன் டாலர் ஓவியத்தை வாங்கிய சிங்கப்பூர் தமிழன்
அமெரிக்காவைச் சேர்ந்த வரைகலைஞர் மைக் விங்கெல்மேனின் (பீப்பிள்) டிஜிட்டல் ஓவியம் ஒன்று கடந்த வியாழக்கிழமை அன்று 70 மில்லியன் டாலருக்கு ஏலம் போனது. ஓவியத்தை ஏலம் எடுத்தவர் மெட்டாகோவன் என்றும் அவர் சிங்கப்பூரில் வசித்து வரும் தமிழர் என்றும் தெரிய வந்துள்ளது. இவர் மெட்டாபர்ஸ் என்ற கிரிப்டோ கரன்ஸி தொடர்புடைய முதலீட்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
பீப்பிள் என்று அறியப்படும் மைக் விங்கெல்மேன் 2007-ம் ஆண்டு மே மாதம் முதல் தினமும் ஒவ்வொரு புகைப்படத்தை சேகரித்து ‘எவ்ரிடேஸ்: தி பர்ஸ்ட் 5,000 டேஸ்’ என்ற தலைப்பில் டிஜிட்டல் ஓவியத்தை உருவாக்கியுள்ளார்.
