

அஸ்ட்ரா ஜெனிகா நிறுவனத்தின் ‘கோவிட்-19’ தடுப்பூசியை ஐரோப்பிய நாடுகள் தவிர்த்து வரும் நிலையில் உலக சுகாதார நிறுவனம் அதனைப் பயன்படுத்துவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என கூறியுள்ளது.
டென்மார்க், நார்வே, ஐஸ்லாந்து, இத்தாலி, ரோமா னியா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் கரோனா வைரஸ் பரவல் தடுப்புக்குப் போடப்பட்ட அஸ்ட்ரா ஜெனிகா நிறுவனத்தின் ‘கோவிட்-19’ தடுப்பூசியினால் சிலருக்கு ரத்தம் உறைந்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதனால், அஸ்ட்ரா ஜெனிகா நிறுவனத்தின் தடுப்பூசியை போட்டுக் கொள்ள பல ஐரோப்பிய நாட்டு மக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். இதன் காரணமாக இந்த நாடுகள் ‘கோவிட்-19’ தடுப்பூசி விநியோகத்தைக் குறைத்து வருகின்றன.
இந்நிலையில் உலக சுகாதாரநிறுவனத்தின் தடுப்பு மருந்துஆலோசனைக் குழுவினர் இதுகுறித்து ஆய்வு செய்துள்ளனர். அதில் அஸ்ட்ரா ஜெனிகா தடுப்பூசிக்கும், ரத்தம் உறைவதற்கும் தொடர்பு இருப்பதற்கான சாத்தியங்கள் ஏதும் இல்லை. கரோனா இறப்புகளை ஆராய்ந்ததில் அதிலும் தடுப்பூசி காரணமாக இறப்புகள் ஏதும் நிகழவில்லை என்று தெரிய வந்துள்ளது.
எனவே மற்ற தடுப்பூசிகளைப் போலவே அஸ்ட்ரா ஜெனிகா பயன்படுத்துவதில் எந்தப் பிரச் சினையும் இல்லை என்று உலக சுகாதார நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் மார்கரெட் ஹாரிஸ் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.