தென் சீனக் கடலில் ஆக்கிரமிப்பு, முறையற்ற வர்த்தக நடைமுறை: சீனாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

தென் சீனக் கடலில் ஆக்கிரமிப்பு, முறையற்ற வர்த்தக நடைமுறை: சீனாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
Updated on
1 min read

தென் சீனக் கடல் பகுதியில் ஆக்கிரமிப்பு மற்றும் முறையற்ற வர்த்தக நடைமுறைகளை பின் பற்றுவதாக சீனாவை அமெரிக்கா கடுமையாக எச்சரித்துள்ளது.

சீனாவுக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன. செனட் உறுப்பினர்கள் ரிக் ஸ்காட், ஜோஷ் ஹாவ்லே, டான் சல்லிவன் ஆகியோர் தீர்மானங்களைக் கொண்டு வந்தனர்.

முதல் தீர்மானத்தில் அமெரிக்கக் கடற்படை மற்றும் கடலோரக்காவல் துறையின் பணி யை உறுப்பினர்கள் வெகுவாக பாராட்டினர். தங்கள் கடல் எல்லையை மீறி சீனப் படை செயல்படுவதை அமெரிக்கா ஒருபோதும் அனுமதிக்காது என்றும் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. சீன அதிபர் ஜி ஜி்ன்பி்ங் தலைமையிலான கம்யூனிஸ்ட் அரசாங்கம் தென் சீனகடல் பகுதியில் ஆதிக்கம் செலுத்தவிரும்புவது கண்டிக்கத்தக்க செயல் என்று தீர்மானத்தை அறிமுகம் செய்து பேசுகையில் ஸ்காட் குறிப்பிட்டார். விதிமுறைகளை மீறிய ஆக்கிரமிப்பு நடவடிக்கையை ஒருபோதும் ஏற்க முடியாது என்றும் அவர் கூறினார். தென் சீன கடல் பகுதியை ஆக்கிரமிக்க சீன அரசு தீவிரம் காட்டுவதையும், அண்டை நாடுகள் அமைதியுடன் இருப்பதை சீனா விரும்பாமல் அத்துமீறி செயல்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சர்வதேச விதிமுறைகளை மீறி தென் சீன கடல் பகுதியில் சீனா ஆதிக்கம் செலுத்த முயல்வதாக மற்றொரு செனட் உறுப்பினர் விக்கர் குறிப்பிட்டார்.

இதேபோல வர்த்தகத்தில் சீனாவின எதேச்சதிகார வர்த்தகப் போக்கை சில உறுப்பினர்கள் வன்மையாகக் கண்டித்தனர். சீனாவின் இத்தகைய நடவடிக்கை, சர்வதேச அளவில் வர்த்தகத்தை பாதிப்பதோடு அமெரிக்க நிறு வனங்களையும் பாதிப்பதாக உறுப்பினர்கள் குறிப்பிட்டனர். சீன நிறுவனங்களுக்கு அதிக சலுகை அளிப்பது, அறிவுசார் சொத்துரிமை திருட்டு உள்ளிட்ட நடவடிக்கைகளின் மூலம் சீன நிறுவனங்கள் முறையற்ற வர்த்தகத்தில்ஈடுபடுகின்றன. இது சர்வதேசஅளவில் வர்த்தகத்தை பாதிப்பதோடு அமெரிக்க நிறுவனத் தயாரிப்புகளையும் பாதிப்பதாக செனட் உறுப்பினர்கள் குறிப்பிட்டனர். சீனாவின் இந்த செயல்பாடுகளைக் கண்டித்தும் தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in