

லிபியாவின் பெங்காஷி நகரில் ராணுவப் படையினருக்கும் இஸ்லாமிய கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது ராணுவத்தினர் வான்வழியே குண்டு வீசி தாக்கியதில் 21 பேர் கொல்லப்பட்டனர்.
வட ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான லிபியாவில், ராணுவத்திற்கும் இஸ்லாமிய கிளர்ச்சியாளர் அமைப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து வெடித்த சமயத்தில் அந்நாட்டு ராணுவப்படை விமானத்த்லிருந்து குண்டுகளை வீசி தாக்கியது. இதில் ருலூர், ஒன்ஃபாத், சிதி பராக் ஆகிய இஸ்லாமிய அமைப்பினர் 21 பேர் பலியாயினர்.
இந்த பலி எண்ணிக்கை உறுதி செய்யப்படாத நிலையில், இவை மேலும் அதிகரிக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த தாக்குதலில் 110 பேர் படுகாயமடைந்துள்ளனர்.