Published : 09 Mar 2021 03:11 AM
Last Updated : 09 Mar 2021 03:11 AM

5 நிமிடங்களில் சார்ஜாகும் பேட்டரி: இஸ்ரேல் கண்டுபிடிப்பு

இஸ்ரேல்

அதிவேக ரீசார்ஜ் தொழில் நுட்பங்களில் நிபுணத்துவம் கொண்ட இஸ்ரேலைச் சேர்ந்த ஸ்டோர்டாட் என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம் முதல் தலைமுறை லித்தியம் அயன் பேட்டரியை உருவாக்கியுள்ளது.

இந்த பேட்டரி முழுவதுமாக சார்ஜ் ஆக 5 நிமிடங்களே ஆகும் என்கிறார் நிறுவனத்தின் நிறுவனர் டோரன் மயர்ஸ்டார்ஃப்.

மேலும் அவர் கூறும்போது, ‘‘இந்த அதிவேக பேட்டரி தொழில்நுட்பமானது எலெக்ட் ரிக் வாகன ஓட்டுநரின் அனுபவத்தையே தலைகீழாக மாற்றக்கூடியது. நெடுந்தூரப் பயணங்களில் உள்ள சார்ஜ் ஏற்றும் கவலையை முற்றிலுமாக நீக்கிவிடுகிறது. சார்ஜ் செய்ய சில மணி நேரங்கள் ஆகும் என்ற நிலையை இந்த பேட்டரி மாற்றிவிடும்’’ என்கிறார்.

இதற்காக பல்வேறு பரி சோதனைகளை இந்நிறுவனம் செய்துள்ளது. இந்நிறுவனம் மொபைல், ட்ரோன், ஸ்கூட்டர் களுக்கு பேட்டரிகளை உற்பத்தி செய்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x