

ஹசன் சுரூர் (65) என்ற பிரிட்டன் இந்திய பத்திரிகையாளர் லண்டனில் திங்களன்று கைது செய்யப்பட்டார்.
சிறுமி பாலியல் விவகாரத்தில் இவரை பிரிட்டிஷ் டிரான்ஸ்போர்ட் போலீஸ் கைது செய்துள்ளனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: “14 வயது சிறுமி பாலியல் விவகாரத்தில் 65 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டார். இவர் போலீஸாரால் நவம்பர் 9-ம் தேதி டெப்ட்போர்ட் பிரிட்ஜ் டிஎல்ஆர் ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டார், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுமியரை பாலியல் ரீதியாக தூண்டும் விவகாரத்தைத் தடுக்கும் அன்நோன் டிவி (Unknown TV) என்ற குழுவின் ரகசிய புலனாய்வின் மூலம் ஹசன் சுரூர் சிக்கியதாகக் கூறப்படுகிறது.
பேஸ்புக்கில் இவருடன் 14 வயது சிறுமி போல் உரையாடல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் படி சந்திப்பதாக முன்னேற்பாடாக கொடுக்கப்பட்ட இடமான டெப்ட்போர்டு ரயில் நிலையத்துக்கு ஹசன் சூருர் வர அங்கு அவர் கைது செய்யப்பட்டார்.
பிரிட்டன் குடியுரிமையாளரான ஹசன் சுரூர் பிரிட்டன் மற்றும் இந்தியாவில் புகழ்பெற்ற பத்திரிகையாளர் என்பது குறிப்பிடத்தக்கது.