

நியூசிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவாகி உள்ளது.
இதுகுறித்து நியூசிலாந்து புவியியல் மையம் தரப்பில், “ நியூசிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவாகியது. ஆக்லாந்து நகருக்குக் கிழக்கே சுமார் 412 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கத்தின் மையம் உருவாகியது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து நியூசிலாந்தில் கடலோரப் பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கும்படி அறிவுறுத்தப்பட்டனர்.
எனினும் சுனாமி ஏற்படுவதற்காக சூழல் இல்லை என்பதை உறுதி செய்த பின்னர் அறிவிப்பைத் திரும்ப பெற்றது நியூசிலாந்து அவசர மேலாண்மை குழு. இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.
நியூசிலாந்து நாடு, பசிபிக்கின் நெருப்புவளையத்தின் ஒரு பகுதியில் அமைந்துள்ளது. இங்கு கடலுக்குக் கீழே உள்ள பல டெக்டோனிக் பிளேட்களின் குறுக்குவெட்டுப் பகுதிகளில்தான் எரிமலை மற்றும் நிலநடுக்கத்தின் மையம் உள்ளது.
இதன் காரணமாகவே நியூசிலாந்தில் அடிக்கடி நில நடுக்கம் ஏற்படுகின்றது.