Published : 04 Mar 2021 06:00 PM
Last Updated : 04 Mar 2021 06:00 PM

ஹெச் 1-பி விசா தொடர்பான சீர்திருத்தங்களை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்: ஜோ பைடனுக்கு செனட்டர்கள் கடிதம்

அமெரிக்காவில் பணிபுரியும் வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும் ஹெச் 1-பி விசா தொடர்பான சீர்திருத்தங்களை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு அமெரிக்க செனட்டர்கள் இருவர் கடிதம் எழுதியுள்ளனர்.

ஹெச் -1பி விசாக்களை அதிக ஊதியம் வழங்கும் நிறுவனங்களுக்கு முதலில் ஒதுக்கீடு செய்ய வேண்டும், அதன் பிறகே மற்றவர்களுக்கு வழங்க வேண்டும் என்று டிரம்ப் தலைமையிலான அரசு ஜனவரி மாதத்தில் அறிவித்தது.

ஹெச் -1 பி விசா தொடர்பான சீர்திருத்தங்கள் மார்ச் 9 முதல் நடைமுறைக்கு வருவதாக இருந்தது. இந்நிலையில் ஹெச் -1 பி விசா தொடர்பான புதிய நடைமுறையை அமல்படுத்துவதை டிசம்பர் 31 -ம் தேதி 2021 க்கு தள்ளிவைத்துள்ளது.

இந்த நிலையில் ஹெச் 1-பி விசா வழங்குவது தொடர்பான சீர்திருத்தங்களை அறிமுகப்படுவதுவதில் தாமதிக்க வேண்டாம் என்று பைடன் அரசுக்கு இரண்டு செனட்டர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

அக்கடித்தத்தில் ”ஹெச்-1பி விசாவை பல நிறுவனங்கள் தவறாக பயன்படுத்தி வெளிநாடுகளிலிருந்து குறைந்த ஊதியத்தில் ஆட்களை வேலைக்கு எடுத்து வருகின்றன.

இதனால் அமெரிக்கர்கள் வேலையின்மையை எதிர்கொள்கின்றனர். எனவே, ஹெச் 1-பி விசா வழங்குவது தொடர்பான சீர்திருத்தங்களை கால தாமதம் செய்யாமல் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x