

கிரீஸில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியது.
இதுகுறித்து ஏதென்ஸ் ஜியோடைனமிக் நிறுவனம் தரப்பில், “ கிரீஸில் இன்று (புதன்கிழமை) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவாகி உள்ளது. இதன் எலாஸ்சோனா நகரை மையமாகக் கொண்டு உருவானம் இந்த நில நடுக்கத்தின் ஆழம் 20 கிலோ மீட்டர் ஆகும்.
இந்த நில நடுக்கம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உணரப்பட்டது. அல்பானியா, கோசாவா மற்றும் வடக்கு , மத்திய பகுதிகளிலும் உணரப்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் குறித்து கிரீஸ்ஸை சேர்ந்த லாரிஸ்சா கூறும்போது, “ நான் வாகனம் ஓட்டிக் கொண்டிருந்தேன். அப்போது பொருட்கள் எல்லாம் ஆட தொடங்கின. அது மிகவும் பயமுறுத்தியது” என்று தெரிவித்தார்.
நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் குலுங்கியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரம் ஏதும் வெளியாகவில்லை.