

இலங்கையில் தமிழர் பகுதிகளில் மாவீரர் தினத்தை கொண்டாட அந்த நாட்டு அரசு தடை விதித் துள்ளது.
இலங்கை உள்நாட்டுப் போரின் போது உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் விடுதலைப் புலிகள் சார்பில் ஆண்டுதோறும் நவம்பர் 27-ம் தேதி மாவீரர் தினம் கொண்டாடப் பட்டது. அதன்படி இன்று மாவீரர் தினத்தை கொண்டாட சில அமைப்புகள் ஏற்பாடு செய்துள்ளன.
இதுதொடர்பாக இலங்கை காவல் துறை செய்தித் தொடர் பாளர் ருவான் குணசேகர கொழும்பில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
புலிகள் இயக்கத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பயங்கரவாத தடை சட்டம் மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காக மாவீரர் தினத்தை கொண்டாட அனுமதிக்கப்படாது என்றார்.
20 பேர் விடுதலை
விடுதலைப் புலிகள் என்ற சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்ட 20 பேர் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் என்று இலங்கை அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித் துள்ளார்.