Published : 26 Feb 2021 04:51 PM
Last Updated : 26 Feb 2021 04:51 PM

இலங்கைக்கு பாகிஸ்தான் 50 மில்லியன் டாலர் கடனுதவி

இலங்கைக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இம்ரான் கான் அந்நாட்டுக்கு சுமார் 50 மி ல்லியன் டாலர் கடனுதவி அறிவித்திருக்கிறார்.

இலங்கைக்கு முதல் முறையாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், அரசு முறைப் பயணமாகச் சென்றுள்ளார். இரண்டு நாள் பயணத்தில் பாகிஸ்தான் - இலங்கை இடையேயான உறவை வலுவாக்குவது குறித்து பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றார் இம்ரான்.

பிரதமர் மகிந்தா ராஜபக்சே, அதிபர் கோத்தபய ராஜபக்சே இருவரையும் சந்தித்து இரு நாட்டு உறவுக் குறித்து ஆலோசித்தார்.

இந்த நிலையில் தனது இரண்டாவ்து நாள் பயணத்தில் இலங்கைக்கு சுமார் 50 மில்லியன் டாலர் கடனுதவிதி அறிவித்திருக்கிறார் இம்ரான் கான்.

இதுகுறித்து பாகிஸ்தான் அரசு வெளியிட்ட அறிக்கையில், “ பிரதமர் இம்ரான் கான் இலங்கை அரசுக்கு சுமார் 50 மில்லியன் டாலரை கடனாக அறிவித்திருக்கிறார்.

பாதுகாப்பு, பயங்கரவாதம், போதைப்பொருள், போதைப்பொருள் கடத்தல் மற்றும் உளவுத்துறை பகிர்வு தொடர்பான விஷயங்களை கையாள்வதில் ஒருவருக்கொருவர் ஆதரவளிப்பதற்கும், ஒருங்கிணைப்பதற்கும் வலுவான உறவு தேவை என்பதை இரு தரப்பு அரசுகளும் இச்சந்திப்பில் வலியுறுத்தி உள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசு மீதான போர் குற்றங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபைகேள்வி எழுப்பி வரும் நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் பயணம் முக்கியதுவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

முன்னதாக இலங்கை பயணத்தில் காஷ்மீர் பிரச்சனையை, இந்தியா - பாகிஸ்தான் பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்க்க முடியும் என்று இம்ரான் கான் கூறியது சர்வதேச அளவில் கவனம் பெற்றது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x