Published : 25 Feb 2021 11:02 AM
Last Updated : 25 Feb 2021 11:02 AM

பிரான்ஸில் அதிகரிக்கும் கரோனா: ஒரே நாளில் 31,519 பேர் பாதிப்பு

பிரான்ஸில் கடந்த சில நாட்களாக கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதுகுறித்து அமெரிக்காவைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவப் பல்கலைக்கழகம் கூறுகையில், “பிரான்ஸில் கடந்த 24 மணி நேரத்தில் 31,519 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 277 பேர் பலியாகி உள்ளனர்.

கடந்த சில நாட்களாகவே பிரான்ஸில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுவரை 36 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 85 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்” என்று தெரிவித்துள்ளது.

கரோனாவைத் தடுக்க பிரான்ஸ் அரசு தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. பிப்ரவரி மாதம் முடிவதற்குள் 40 லட்சம் பேர் கரோனா தடுப்பு மருந்தைப் பெற்றிருப்பார்கள் என்றும் பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது.

உருமாறிய கரோனா வைரஸ்

பிரிட்டனில் பரவத் தொடங்கிய உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ் ஜெர்மனி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் பரவியது. இதனைத் தொடர்ந்து உலக நாடுகள் கரோனா மருத்துவப் பரிசோதனைகளைத் தீவிரப்படுத்தின. சமூக விலகலை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு சார்பாகத் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் பிரான்ஸில் கரோனா தொற்று தற்போது கட்டுக்குள் உள்ளது.

ஸ்புட்னிக், மாடர்னா, பைசர் ஆகிய கரோனா தடுப்பு மருந்துகள் புதிய வகை கரோனா வைரஸுக்கு எதிராகப் பயன் அளிப்பதாக மருந்து நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

உலகம் முழுவதும் 11 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 25 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x