

ருமானியாவில் இரவு விடுதியில் நிகழ்ந்த தீ விபத்தில் சிக்கி 30 பேர் உயுிரிழந்தனர். இந்த விபத்தை தடுக்க அரசு தவறியதாக போராட்டம் நடந்த நிலையில், அந்நாட்டின் பிரதமர் விக்டர் பான்டா நேற்று திடீரென பதவியில் இருந்து விலகினார்.
ருமேனியா தலைநகர் புகாரெஸ்டில், இரவு விடுதியில், திடீரென தீ விபத்து நேரிட்டது. அப்போது விடுதியில் இருந்தவர்களில், 30 பேர் உடல் கருகி பரிதாபமாக இறந்தனர். 130க்கும் மேற்பட்டோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனயில் சேர்க்கப்பட்ட னர்.
இந்த தீ விபத்தை தடுக்க தவறிய அரசைக் கண்டித்தும், பிரதமர் விக்டர் பான்டா, உள்துறை அமைச்சர் கேப்ரியல் ஆப்ரியா மற்றும் அந்நகர மேயர் ஆகியோர் பதவி விலக வலியுறுத்தியும், நேற்று, 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், புகாரெஸ்டில் கண்டன போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில், பிரதமர் விக்டர் பான்டா நேற்று தன் பதவியை ராஜினாமா செய்தார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘மக்களின் விருப்பதுக்கு பணிந்து, என் பதவியை ராஜினாமா செய்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.