ஜப்பானில் தற்கொலைகளை தடுப்பதற்காக தனி அமைச்சர் நியமனம்

ஜப்பானில் தற்கொலைகளை தடுப்பதற்காக தனி அமைச்சர் நியமனம்
Updated on
1 min read

ஜப்பானில் கடந்த சில மாதங்களாகவே தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன. இதனை தவிர்பதற்காக தனித்துறை ஒன்றை உருவாகி அதற்காக தனி அமைச்சரையும் ஜப்பான் அரசு ஏற்படுத்தி உள்ளது.

கடந்த ஒரு வருடமாக கரோனா வைரஸ் காரணமாக உலக நாடுகளின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளது. இதன் காரணமாக பொருளாதாரச் சரிவு மற்றும் வேலையின்மையை மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர்.

கரோனா வைரஸுக்கு மத்தியில் உலக நாடுகளுக்கு ஜப்பான் சமீபத்தில் எச்சரிக்கை செய்தி ஒன்றை வழங்கியுள்ளது. இந்த ஆண்டில் கரோனா வைரஸைவிட ஜப்பான் தற்கொலைகளுக்கு அதிக உயிர்களைப் பலி கொடுத்துள்ளது

அதுவும் குறிப்பாக ஜப்பானில் இந்த வருடம் அதிக எண்ணிக்கையிலான இளம் தலைமுறையினர் தங்களது வாழ்க்கையை முடித்துக் கொண்டுள்ளனர்.

ஜப்பானில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவு தற்கொலைகள் அதிகரித்து உள்ளது. எனவே இதனை கட்டுப்படுத்த தற்கொலைகளை தடுப்பதற்காக தனிமைத்துறை ஒன்றை உருவாக்கி அதற்கு அமைச்சரையும் நிறுவி உள்ளது ஜப்பான் அரசு.

ஜப்பானின் இந்த துறைக்கு நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் சகாமோடோ கூறும்போது, “ சிக்கலை ஆராய்ந்து அதற்கான தீர்வை வெளியிடுமாறு ஜப்பான் பிரதமர் சுகா என்னை அறிவுறுத்தி இருக்கிறார். சமூக தனிமை மற்றும் தனிமைப்படுத்தப்படுவதைத் தடுப்பதற்கும், மக்களிடையேயான உறவுகளைப் பாதுகாப்பதற்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வேன் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in