

அல் காய்தா வழியில் செயல்படும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு தீவிரவாதிகள் இந்த மாதத்தில் இராக் நகரான திக்ரித்தில் பிணைக்கைதிகளாக பிடித்து வைத்திருந்த 200 பேரை ஒரே இடத்தில் மொத்தமாக படுகொலை செய்துள்ளனர். இந்த அதிர்ச்சிகர தகவலை மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு (எச்ஆர்டபிள்யு) தெரிவித்துள்ளது.
ஜூன் மத்தியில் தாம் கைது செய்து பிணைக் கைதிகளாக வைத்திருந்த பாதுகாப்புப் படை வீரர்களை கும்பலாக ஒரே இடத்தில் சேர்த்து கொன்றதாக தெரிவித்துள்ள தீவிரவாத அமைப்பு அப்படி கொல்லப்பட்டவர்களின் சடலங்களை புகைப்படமாக இணையதளத்தில் வெளியிட்டது.
2014 ஜூன் 11-ம் தேதி திக்ரித் நகரை கைப்பற்றிய தீவிரவாதிகள் பிணைக் கைதிகளாக தாம்பிடித்து வைத்திருந்த பாதுகாப்புப் படையினரை கொன்றது உண்மைதான் என தெரிய வந்துள்ளதாக அந்த புகைப்படங்களையும் செயற்கைக்கோள்களில் பதிவான படங்களையும் ஆய்வு செய்த மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.
ஜூன் 11 ம் தேதிக்கும் 14ம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் இரு இடங்களில் மொத்தமாக வைத்து கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை 160லிருந்து 190 வரை இருக்கும் என அந்த அறிக்கை மேலும் தெரிவிக்கிறது. திக்ரித்தில் சுமார் 1700 ஷியா பிரிவு படை வீரர்களை கொன்றதாக ஐஎஸ் ஐஎஸ் தெரிவித்திருக்கிறது.
திக்ரித் பகுதியிலிருந்து கிடைத்த புகைப்படங்கள், செயற் கைக்கோளில் பதிவான படங்கள் அங்கு கொடிய போர்க்குற்றம் நடந்திருப்பதற்கான ஆதாரங்களாக உள்ளன. இது பற்றி மேலும் விசாரிக்க வேண்டியது அவசியம் என்று எச்ஆர்டபிள்யு பேரிடர் பிரிவு இயக்குநர் பீ்ட்டர் பொக்கார்ட் கூறினார்.
ஐஎஸ்ஐஎஸ் வெளியிட்ட புகைப்படங்களில் உள்ள அடையாளங்கள், நில அமைப்பை வைத்து தேடியதில் சடலங்கள் புதைக்கப்பட்டிருந்த இரு இடங்கள் தெரியவந்தது.
ஆயுதப் போரின்போது, மோதலில் பங்கேற்காத அப்பாவி களையும், ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு சரணடைந்தவர் களையும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளவர்களையும் கொல்வது போர்க் குற்றமாகும்.
ஒரு அமைப்புரீதியான குழுவா னது கொல்வதை மட்டுமே கொள் கையாக கொண்டு செயல்படுவது மானுட இனத்துக்கு எதிரான குற்ற மாகும். இவ்வாறு பொக்கார்ட் தெரிவித்துள்ளார்.