

மெக்சிகோவில் கடந்த 24 மணி நேரத்தில் 857 பேர் பலியாக அங்கு பலியானவர்கள் எண்ணிக்கை 1,78,965 ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து மெக்சிகோ சுகாதாரத் துறை தரப்பில், “ கடந்த 24 மணி நேரத்தில் 857 பேர் பலியாக அங்கு பலியானவர்கள் எண்ணிக்கை 1,78,965 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 7,829 பேர் கரோனாவால் பாதிக்கப்பட மெக்சிகோவில் இதுவரை 20 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் அமெரிக்க நாடுகளில் கரோனாவுக்கு அதிகமான பலி ஏற்பட்டுள்ள நாடாக மெக்சிகோ கருதப்படுகிறது.
உலக அளவில் கரோனாவினால் அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள்ள நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. பிரேசில் இரண்டாம் இடத்திலும், இந்தியா மூன்றாம் இடத்திலும் உள்ளன.
சீனாவை தொடர்ந்து, பிரிட்டனில் பரவத் தொடங்கிய உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ், ஜெர்மனி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் பரவி வருகிறது.
இதனைத் தொடர்ந்து உலக நாடுகள் கரோனா மருத்துவப் பரிசோதனைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. சமூக விலகலை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு சார்பாகத் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
ஸ்புட்னிக், மாடர்னா, பைசர் ஆகிய கரோனா தடுப்பு மருந்துகள் புதிய வகை கரோனா வைரஸுக்கு எதிராகப் பயன் அளிப்பதாக மருந்து நிறுவனங்கள் தெரிவித்துள்ளன
இந்த நிலையில் பிரிட்டனில் பரவும் கரோனா வைரஸ் உலகம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.