மும்பை தாக்குதல் தீவிரவாதிகள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும்: ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் வலியுறுத்தல்

மும்பை தாக்குதல் தீவிரவாதிகள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும்: ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் வலியுறுத்தல்
Updated on
1 min read

அனைத்து பயங்கரவாத தாக்குதல் குற்றவாளிகளும் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் தெரிவித்தார்.

கடந்த 2008 நவம்பர் 26-ம் தேதி மும்பையில் தீவிர வாதிகள் நடத்திய தாக்குதலின் 7-ம் ஆண்டு தினம் இந்தியாவில் நேற்று அனுசரிக்கப்பட்டது. இந்நி லையில் பிடிஐ செய்தியாளருக்கு பான் கி மூன் நேற்று பேட்டி அளித்தார்.

பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத குழுக்களுக்கு எதி ரான நடவடிக்கையை அந்நாடு தீவிரப்படுத்துவது மற்றும் ‘நவம்பர் 26’ மும்பை தாக்குதலை நிகழ்த்திய வர்களை நீதிக்கு முன் நிறுத்துவதன் அவசியம் குறித்து செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பான் கி மூன் பதில் அளிக்கும்போது, “அனைத்து பயங்கரவாத தாக்குதல் குற்ற வாளிகளும் நீதியின் முன் நிறுத்தப் படவேண்டும். இதில் உறுப்பு நாடுகள் பாரபட்சம் பார்க்கக் கூடாது. இந்தியா பாகிஸ்தான் இடையே உறவு மேம்படும்போது, பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்கான உகந்த சூழல் இரு நாடுகளிலும் ஏற்படும் என்று நம்புகிறேன்.

தீவிரவாதத்தால் ஒவ்வொரு நாளும் அதிக உயிரிழப்பு ஏற்படுகி றது. லெபனான் மற்றும் பிரான்ஸில் சமீபத்தில் நிகழ்த்தப் பட்ட கொடூர தாக்கு தல்களே இதற்கு உதாரணம். பயங்கரவாதத்தை வேரறுக்க உறுப்பு நாடுகள் ஒருங்கிணைந்து பாடுபட வேண்டும்” என்றார்.

‘நவம்பர் 26’ மும்பை தாக்கு தலுக்கு மூளையாக செயல்பட்ட வர்கள் இதுவரை நீதியின் முன் நிறுத்தப்பட வில்லை. இது தொடர்பாக பாகிஸ்தான் நீதிமன்றத் தில் நடைபெறும் வழக்கில் அந்நாட்டு அரசு தீவிரம் காட்டாத தால், வழக்கு இழுத்தடிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக பான் கி மூன் மேலும் கூறும்போது, “மும்பை தாக்குதல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜகியுர் ரஹ்மான் லக்வியை பாகிஸ்தான் நீதிமன்றம் விடுவித்துள்ளதை நான் அறிவேன். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின், பொருளாதார தடைக்கான குழுவின் கவனத்துக்கு இதை இந்தியா கொண்டு வந்துள்ளது” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in