ஜப்பானில் கரோனா தடுப்பு மருந்து செலுத்தும் பணி தொடக்கம்

ஜப்பானில் கரோனா தடுப்பு மருந்து செலுத்தும் பணி தொடக்கம்
Updated on
1 min read

ஜப்பானில் கரோனா தடுப்பு மருந்து செலுத்தும் பணி இன்று (புதன்கிழமை) தொடங்கியது.

இதுகுறித்து ஜப்பான் ஊடங்கங்கள் தரப்பில், “கரோனா தடுப்பு மருந்துகளால் பக்க விளைவுகள் ஏற்படுவதைத் தொடர்ந்து ஜப்பானில் கரோனா தடுப்பு மருந்து செலுத்தும் பணி தாமதிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று (புதன்கிழமை) முதல் ஜப்பானில் கரோனா தடுப்பு மருந்து செலுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. பைஸர் கரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட உள்ளது. முதலில் சுகாதாரப் பணியாளர்கள் கரோனா தடுப்பு மருந்தைப் பெற உள்ளனர்.

நாடு முழுவதும் சுமார் 40,000 சுகாதாரப் பணியாளர்கள் கரோனா தடுப்பு மருந்தைச் செலுத்தத் தேர்தெடுக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானில் கரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மார்ச் 7ஆம் தேதி வரை அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

கரோனா லாக்டவுனால் பல நாடுகள் பொருளாதார பாதிப்பைத் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கைக்கு அனுமதித்து வருகின்றன. பெரும்பாலான நாடுகளில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டனர்.

உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 10 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 20 லட்சத்துக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். கரோனாவுக்குத் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in