Published : 12 Feb 2021 11:44 AM
Last Updated : 12 Feb 2021 11:44 AM

பிபிசி செய்திகளுக்கு சீனாவில் தடை

சீனாவின் தேசிய நலனுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் செய்தி வெளியிட்டதற்காக பிபிசி செய்தி நிறுவனம் சீன அரசால் தடைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.

வெள்ளைக்கிழமை சீன அரசின் தலைமையின் கீழ் இயங்கும் வானொலியில், “பிபிசி சமீபத்தில் வெளியிட்ட செய்திகள் சீனவின் ஒற்றுமைக்கும், தேசிய நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து சீனாவில் பிபிசி சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கரோனா வைரஸை சீனா அரசு கையாண்ட விதம் குறித்து, சிறுபான்மையின மக்களுக்கு எதிராக சீனா எடுத்த நடவடிக்கைகள் குறித்து பிபிசி சமீபத்தில் செய்தி வெளியிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்தே இந்த நடவடிக்கையில் சீனா இறங்கி உள்ளது.

இந்த நிலையில் இதுகுறித்து பிபிசி கூறும்போது, “ சீன அதிகாரிகளின் இந்த முடிவு எங்களை ஏமாற்றம் அடையச் செய்துள்ளது. பிபிசி என்பது நம்பகத்தன்மையான செய்தி நிறுவனம் ஆகும். உலகெங்கிலும் உள்ள செய்திகளை நியாயமாகவும் பாரபட்சமின்றி, எந்தவித ஆதரவும் இல்லாமல் வழங்கி வருகிறது” என்றார்.

சீனா இங்கிலாந்தின் முக்கியக் கூட்டாளி ஆகும். இந்தத் தடை சீனா - இங்கிலாந்து இடையேயான உறவு மேலும் மோசமடைந்துள்ளதைக் காட்டுவதாக இங்கிலாந்து தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x